- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெப்டம்பர் 14 ஏகாதசி பெருமாள் வழிபாடு

செப்டம்பர் 14 ஏகாதசி பெருமாள் வழிபாடு

- Advertisement -

நாளை மறுநாள் வரக்கூடிய சனிக்கிழமை செப்டம்பர் 14ஆம் தேதி ஆவணி மாத ஏகாதசி திதி வருகிறது. சனிக்கிழமை இந்த ஏகாதேசி திதி வருவது சிறப்பு. இந்த நாளில் திருவோண நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறது. ஆக ஏகாதசி, சனிக்கிழமை, திருவோண நட்சத்திரம் இந்த மூன்று சிறப்புகளும் சேர்ந்திருக்கும் இந்த நாளில் பெருமாள் வழிபாடை செய்ய யாருமே தவற விடாதீர்கள். பெருமாள் வழிபாடு நம் வறுமையை நீக்கும். செல்வ செழிப்பை உண்டாக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

வரும் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 17ஆம் தேதி புரட்டாசி 1 பிறக்கவிருக்கிறது. அதற்கு முன்பாகவே வந்திருக்கும் இந்த ஏகாதேசி நாள் நமக்கு பெருமாளின் ஆசிர்வாதத்தை முன்கூட்டியே பெற்றுத் தரும். அந்த வகையில் சனிக்கிழமை எல்லோர் வீட்டிலும் செய்ய வேண்டிய பெருமாள் வழிபாடு பற்றியும், வறுமையை நீக்கி செல்வ வளத்தை கொடுக்கும் ஒரு எளிய பரிகாரத்தை பற்றியும் தான் இன்றைய ஆன்மீக சார்ந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

ஏகாதசி வழிபாடு

சனிக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, ‘ஓம் நமோ நாராயணா’ என்று சொல்லி அந்த நாளை துவங்குங்கள். விரதம் இருக்க முடியும் என்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளவர்கள் பசி தாங்க முடியாது என்பவர்கள் சாதாரணமாக எப்போதும் போல சாப்பிடும் விரதம் மேற்கொள்ளலாம், பெருமாளை வழிபாடு செய்யலாம் தவறு கிடையாது. அன்றைய நாள் முழுவதும் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுங்கள்.

சனிக்கிழமை மாலை 6:00 மணி அளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளுக்கு பசும்பால் தயிரில் செய்த, இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்த தயிர் சாதம் மணக்க மணக்க செய்து வைத்து, துளசி இலைகளை வாங்கி பெருமாளுக்கு அலங்காரம் செய்து, தீப தூப ஆராதனை காட்டி பெருமாளை வணங்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய பிரச்சனைகளை பெருமாளிடம் சொல்லி இந்த பூஜையை செய்யுங்கள். பூஜையில் ‘ஓம் நமோ நாராயணா, கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை எழுப்புங்கள். இந்த வழிபாட்டை முடித்துவிட்டு விரதம் இருப்பவர்கள் அந்த தயிர் சாதத்தை சாப்பிட்டு உங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதோடு சேர்த்து பெருமாளின் பாதத்தில் நீங்கள் இந்த மூன்று பொருட்களை வைக்க வேண்டும். ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் இந்த மூன்றுமே பெருமாளுக்கு உகந்தது. இந்த மூன்று பொருட்கள் சேர்த்து தான் பெருமாளின் தீர்த்தமும் தயார் செய்யப்படும். ஒரு சின்ன கிண்ணத்தில் தேவையான அளவு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து பெருமாள் பாதத்தில் வைத்து இந்த பூஜையை செய்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து நன்றாக தூள் செய்து கொள்ளவும். பொடி செய்த இந்த தூளை உங்களுடைய வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தூவி விடுங்கள். பெருமாளே எங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் விலக வேண்டும். வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிலவ வேண்டும் என்று சொல்லி இந்த பொடியை தூவி விட்டால் போதும்.

நிலை வாசலுக்கு வெளிப்பக்கம் நின்று கொண்டு, உங்கள் உள்ளங் கைகளில் இந்த பொடியை வைத்துக் கொண்டு நிலை வாசலுக்கு உள்ளே பார்த்தவாறு இந்த பொடியை ஊதி விடுங்கள். உங்கள் வீட்டிற்குள் பெருமாளின் வருகை, மகாலட்சுமியின் வருகையும், பண வருகையும் உண்டாகும் என்பது இந்த பரிகாரத்தில் இருக்கும் நம்பிக்கை. இந்த பொடியை கொஞ்சமாக ஒரு பச்சை துணியில் வைத்து மூட்டையாக கட்டி பீரோவில் பணம் வைக்கும் பெட்டியிலும் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: திருமண தடை நீக்கும் முருகர் பதிகம்

முடிந்தால் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் தீர்த்தத்தை அருந்தி, தாயாரையும் பெருமாளையும் வழிபாடு செய்வது நல்லது. இந்த எளிமையான வழிபாடும், எளிமையான பரிகாரமும் உங்கள் பண கஷ்டத்தை தீர்க்க உதவி புரியும். வரும் சனிக்கிழமை மறந்துடாதீங்க அதி அற்புதம் வாய்ந்த இந்த நாள் உங்கள் கஷ்டத்தை தீர்க்க வந்திருக்கும் நாள் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்