அரசு வேலை கிடைக்க இம்மந்திரத்தை துதித்து வந்தால் பலன் உண்டு

chevvai

நாம் அனைவருமே வாழ்வதற்கு செல்வம் தேவை. ஏதாவது வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றை செய்தால் மட்டுமே நமக்கு செல்வம் கிட்டும். ஆனால் அனைவருக்குமே தொழில், வியாபாரங்கள் செய்யும் திறனோ, சூழலோ இல்லாததால் பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைகளில் சேர்கின்றனர். இப்படி பணியிலிருப்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும், அரசு வேலை பெறும் முயற்சிகளில் இருப்பவர்கள் அது கிடைக்கவும் ஜெபிக்க வேண்டிய “செவ்வாய் பகவான் தமிழ் துதி” இதோ.

sevvai

செவ்வாய் பகவான் தமிழ் துதி

வசன நல் தைரியத்தோடு மன்னவர் சபையில்
வார்த்தை புஜபல பராக்ரமங்கள் போர் தனில்

வெற்றி ஆண்மை நிஜமுடன் அவரவர்க்கு
நீணிலம் தனில் அளிக்கும் குசன் மகனாம்
செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி

Lord Murugan

செவ்வாய் பகவானை போற்றும் தமிழ் துதி இது. இந்த துதியை தினமும் காலையில் 27 முறை துதித்து வருவது சிறந்தது. செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானுக்குரிய சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, வீட்டின் பூஜையறையில் கையில் வேல் வைத்திருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு மலர்களை சாற்றி, நெய் தீபம் ஏற்றி இத்துதியை 27 அல்லது 108 முறை துதிப்பதால் வேலைகளில் சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும். அரசு பணி பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

- Advertisement -

chevvai bagwan

சிறந்த பேச்சாற்றல், மனதில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம், மன்னர்கள் புலவர்கள் இருக்கும் சபைகளில் பேச்சாற்றலில் வெற்றி, உடல் மனதிடம், போட்டிகள் மற்றும் போர் போன்றவற்றில் வெற்றி, மேலான பேராண்மை குணம் ஆகியவற்றை இப்பூவில் வாழும் மனிதர்களுக்கு அளிக்கும் செவ்வாய் பகவானை போற்றுகிறோம் என்பதே இத்துதியின் பொதுவான பொருளாகும். செவ்வாய் பகவானின் இத்துதியை கூறி வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
சீக்கிரம் வேலை கிடைக்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai bhagavan thuthi in Tamil. It is also called as Chevvai bhagavan mantra in Tamil or Arasu velai kidaikka in Tamil or Chevvai slokam in Tamil or Padhavi uyarvu pera in Tamil.