Jothidam : அடுத்த மாதம் செவ்வாய் பெயர்ச்சி. அதற்குள் என்னவெல்லாம் நடக்க வாய்ப்புண்டு தெரியுமா ?

sevvai-bhagawan
- Advertisement -

பொதுவாக குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்கினாலே சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்க தொடங்கி மக்கள் அனைவரையும் படாதபாடு படுத்துகிறது. இத்தகைய கோடைகாலங்களில் தீ விபத்துகள் ஏற்படும் ஆபத்துகள் மிகவும் அதிகரிக்கிறது. கிரக நிலைகள் தீ மற்றும் வெடி விபத்துகளுக்கு எந்த வகையில் காரணமாக இருக்கின்றன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

astro wheel 1

சமீபத்தில் தான் நிழற் கிரகங்களான ராகு – கேது கிரகங்களின் பெயர்ச்சியை நாம் அனைவரும் பார்த்தோம். தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனி கிரகம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று மீனம் ராசியிலிருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சியாகிய செவ்வாய் கிரகத்தை திரிகோண பார்வையாக சனி பகவான் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

சனி பகவான் தனக்கு பகையான குரு பகவானின் ராசியான தனுசு ராசியிலிருந்து, மற்றொரு பகை கிரகமான செவ்வாய் கிரகம் அதன் சொந்த வீடான மேஷம் ராசியிலிருப்பதும், அதுவும் சனி கிரகத்தின் நீச்ச வீடாக மேஷம் ராசி இருப்பதால் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் பலரின் கணிப்பு படி நாட்டில் பல இடங்களில் தீ மற்றும் வெடி விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என முன்பே கூறியிருக்கின்றனர்.

sevvai

அதற்கு எடுத்துகாட்டாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வு போலீஸ் வீரர்கள் சென்ற வாகனத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 40 திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிற்காக தியாகம் செய்ததை அறிந்து வருந்தினோம். சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஓடிகொன்றிருந்த ஒரு ரயிலில் தீ பிடித்ததும், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதும் மேற்கூறிய கிரக நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கான உதாரணங்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

chevvai bagwan

மேலே சொல்லப்பட்ட இரு சம்பவங்களிலும் மனித உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லையென்றாலும். அடுத்த மாதம் செவ்வாய் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் காலம் வரை நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இத்தகைய தீ விபத்துகள் ஏற்படலாம் என்றும், எனவே அனைவரும் எந்த ஒரு விடயத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது அவசியம் என்பது ஜோதிடர்களின் அறிவுரையாக உள்ளது.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் திசை பலன்கள்

இது போன்று மேலும் ஜோதிடம் சார்ந்த பலன்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai graham in Tamil. It is also called as Sevvai graham peyarchi in Tamil or Chevvai peyarchi in Tamil or Sani bhagavan jothidam in Tamil.

- Advertisement -