பெண்கள் சாஸ்திரப்படி செய்யவே கூடாத முக்கியமான தவறுகள். உங்களுடைய குடும்பம் கஷ்டத்தில் இருந்து மீளாமல் இருப்பதற்கு இந்த தவறுகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

pray1

பெண்கள் தான் வீட்டினுடைய கண்கள். சும்மா போற போக்குல, சொல்லிட்டுப் போயிடலாம்! பெண்கள் இல்லை என்றால் வாழ முடியாதா? பெண்கள் இல்லை என்றால், குடும்பம் இல்லையா? என்ற விதண்டா வாதத்திற்காக பேசுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஆனால் அந்த அம்மனின் மறு உருவம் தான் பெண்கள் என்று சொல்கிறது சாஸ்திரம். குறிப்பாக திருமணமானவர்கள், திருமணம் ஆன பின்பு, தாய் ஸ்தானத்தை அடைந்தவர்கள், கடவுளுக்கு இணையாக சொல்லப்படுகிறார்கள். கடவுளுக்கு இந்த உலகத்தை பொறுப்போடு பார்த்துக்கொள்ளும் கடமை உள்ளது என்றால், பெண்களுக்கு அவரவர் குடும்பத்தை பொறுப்போடு பார்த்துக் கொள்ளும் கடமை இருக்கின்றது. இதிலிருந்து எந்த குடும்பப் பெண்ணும் தவறவே கூடாது.

women10

சரி, பெண்கள் செய்யக்கூடிய, அறியாமல் செய்யக்கூடிய சில தவறுகள் என்னென்ன? ஒவ்வொன்றாக பார்த்து விடலாமா? முதலில் பெண்கள் மற்ற சமயங்களில் எந்த உடை அணிந்தாலும், பரவாயில்லை! மற்ற சமயங்களில் எந்த பொட்டு இட்டுக் கொண்டாலும் பரவாயில்லை! கோவிலுக்கு செல்லும் போதும், இறை வழிபாடு செய்யும் போது புடவை அணிந்து கொள்வது, நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக்கொள்வது மிகவும் நல்லது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது இது லட்சுமி கடாட்சமும் கூட.

புடவை அணிய முடியாத சூழ்நிலை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் துப்பட்டா போட்ட உடையை அணிந்து இருந்தாலும் சரி அல்லது புடவை அணிந்து இருந்தாலும் சரி, பின்பக்கம் தொங்கும் அந்த முந்தானையை, அந்த துப்பட்டாவை எடுத்து முன்பக்கம் கையில் வைத்துக்கொண்டு தான் இறைவழிபாடு செய்ய வேண்டும்.

praying god

குறிப்பாக புடவை அணிந்து கொள்ளும் பெண்களுடைய முந்தானை காற்றில் ஆடினால், அந்த குடும்பமும் நடு நடுங்கும், குடும்பமே ஆட்டம் கண்டு விடும், குடும்பம் துன்பத்தில் கஷ்டப்படும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

கோவிலுக்கு சென்று இறைவனிடமிருந்து பிரசாத தீர்த்தம் வாங்கும் சமயத்தில், பெண்களுடைய வலதுகை முதலில் மேலே இருக்கவேண்டும். இடையில் அவர்களுடைய புடவை முந்தானையை அல்லது துப்பட்டாவின் முனையும் இருக்கவேண்டும். அதற்கு அடியில் தான் இடது கை இருக்க வேண்டும். இந்த பணிவும், இந்த அடக்கமும் அந்தப் பெண்ணினுடைய வாழ்க்கை சுமுகமாக நடத்தி செல்ல உதவுகிறது.

theertham

இதற்காக பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லி வைக்கவில்லை. பெண்களுக்கே உரித்தான குணம் அது. பொறுமை காப்பது. பணிந்து போவது. மரியாதை கொடுப்பது இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் பெண்களுடைய மனதில் ஆழப் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் சில பழக்கவழக்கங்களை, சம்பிரதாயம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

இப்படியாக தன்னுடைய புடவை முந்தானைக்கு எப்போதுமே மரியாதை கொடுக்கும் பெண்ணின் வீட்டில் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. இதேபோல் பெண்கள் கோவிலில் நமஸ்காரம் செய்யும் பழக்கம் இருக்கும். அப்போது அந்த முந்தானையை கீழே விடாமல் அதிலிருந்து ஒரு முனையை எடுத்து பிடித்துக்கொண்டு, அந்த முந்தானையோடு கீழே விழுந்து நமஸ்காரம் செய்யும் பழக்கம் இருக்கும். இது சரியான முறை.

namaskaram

நமஸ்காரம் செய்யும்போது நம்முடைய இரண்டு கால் முட்டைகளும் பூமியில் படும், இரண்டு கைகளும் பூமியில் பட்டிருக்கும், கட்டாயம் தலையை கீழே குனியும் போது நம்முடைய நெற்றி பூமாதேவியை தொட்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நமஸ்காரம் செய்யும்போது நம்முடைய பின்னங்கால்கள் இரண்டும் பிரிந்து இருக்க கூடாது. சேர்ந்துதான் இருக்க வேண்டும்.

women1

எப்போதுமே பின்னங்கால்கள் சேர்ந்திருக்கும் படி தான் நமஸ்காரம் செய்ய வேண்டுமே தவிர, பின்னங் கால்களை பிரித்து வைக்கக்கூடாது. ஒன்றன் மேல் ஒன்று பின்னிய படியும் வைக்கக்கூடாது. என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஆரோக்கிய ரீதியாகவும் உங்களுக்கு நல்லது. ஆன்மீக ரீதியாகவும் உங்கள் குடும்பத்திற்கு நல்லது என்று சொல்கிறது சாஸ்திரம்.

namaskaram1

கோவிலுக்கு சென்று தான் பெண்கள் இப்படி நமஸ்காரம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் காலை அல்லது மாலை நேரத்தில் தீப வழிபாடு செய்யும் போதும், உங்கள் வீட்டு பூஜையறையில் உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, நமஸ்காரம் செய்யுங்கள். பின்னங்கால்களை சேர்த்து வைத்து மறக்காமல் மூன்றிலிருந்து ஐந்து முறை நமஸ்காரம் செய்யலாம்.

அப்படி என்றால், நெற்றிப் பொட்டையும் உள்ளங்கையிலும் கீழே வைத்து விட்டு அப்படியே முட்டிபோட்டு எந்திரித்து, இறைவனை வணங்குங்கள். மீண்டும் ஒருமுறை மறுபடி உள்ளங்கைகளையும் நெற்றிப் பொட்டையும் பூமாதேவியின் வைத்து மீண்டும் எந்திரித்து! இறைவனை பார்ப்பது, இப்படியாக ஐந்து முறை நமஸ்காரம் செய்வது குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் நன்மையே நடக்கும் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கோவிலுக்கு எந்த நேரத்தில் செல்ல வேண்டும்? கோவிலில் எந்த இடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு, எந்தப் பொருளை நம்முடைய வீட்டிற்கு எடுத்து வந்தால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.