வீட்டில் உள்ள பெண்களின் ‘பாதம்’ தேய்ந்திருந்தால், இதெல்லாம் தான் நடக்கும்.

patham-lakshmi
- Advertisement -

பொதுவாக பெண்களின் உள்ளங்கை, நெற்றி வகுடு, பாதம் போன்ற இடங்களில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. பெண்கள் தெய்வத்திற்கு இணையாக போற்றபட வேண்டியவர்கள். ஆனால் ஆண்களும் சரி, சில பெண்களும் சரி இதை உணர்ந்து கொள்வதே கிடையாது. ஒரு பெண்ணின் பெருமையை பெண்ணே புரிந்து கொள்ளாத போது, ஆண்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? தன் தாயை, உடன் பிறந்தவளை, கட்டிய மனைவியை, மகளை ஒரு மனிதன் உயர்வாக பார்த்தாலே போதும். அதைக் கூட பலர் செய்வதில்லை. பெண்ணை மதிக்காத புவி எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? அதனால் தான் பூமா தேவியே சில சமயம் பொங்கி எழுந்து தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி விட்டு செல்கிறாள். பெண்ணை மதிக்காத பூமியில் ஆண்களால் நிம்மதியாக இருக்கவே முடியாது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களின் பாதம் தேய்ந்து போயிருக்க கூடாது. அப்படி தேய்ந்திருந்தால் வீட்டில் செல்வம் வற்றிவிடும். இதை பற்றிய விரிவான அலசல் இப்பகுதியில் காணலாம்.

foot1

தெரியாமல் யார் மீதாவது உங்கள் கால் பாதம் பட்டுவிட்டால் உடனே அவர்களை தொட்டு வணங்கி விடுகிறீர்கள். இயல்பாகவே இந்த விஷயம் நமக்கு வந்துவிடுகிறது. ஏன் தெரியுமா? மரியாதை குறைவான செயலாக இந்த செயல் பார்க்கப்படுவதால் நம்மையும் அறியாமல் தொட்டு வணங்குவோம். ஆன்மீகத்தில் இது போல் உங்கள் கால்பாதம் ஒருவர் மீது பட்டுவிட்டால் உங்களிடம் இருக்கும் மஹாலக்ஷ்மி அவர்களிடம் சென்று விடுவார்களாம். இவ்வாறு தொட்டு வணங்குவதால் மஹாலக்ஷ்மி நம்மைவிட்டு நீங்குவதில்லை. செல்வ செழிப்புடன் வாழ இது போன்ற விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். பெண்களின் பாதத்தில் மட்டுமல்ல உலகின் எல்லா ஜீவராசிகளின் பாதத்திலும் மஹாலக்ஷ்மி இருக்கின்றாள்.

- Advertisement -

புகுந்த வீட்டிற்கு முதல் முதலாக வரும் மருமகளை வலது கால் வைத்து உள்ளே வர சொல்வதும் இதனால் தான். மஹாலக்ஷ்மியும், மகாவிஷ்ணுவும் சேர்ந்து வலது பாதத்திலும், மகாலக்ஷ்மியும், மூதேவியும் சேர்ந்து இடது பாதத்திலும் வாசம் செய்வதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் தான் வலது பாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் நல்ல காரியத்திற்காக வெளியே செல்லும் போது, இது போல் வலது காலை எடுத்து வைத்து செல்லுங்கள். வெற்றி நிச்சயம். மீண்டும் உள்ளே வரும்போது வலது காலை எடுத்து வைத்து வாருங்கள்.

manamagal

ஒருவரின் பாவங்கள் மற்றவர்களுக்கு சேராமல் இருக்க வேண்டுமென்றால் யாரையும் தங்கள் பாதத்தில் விழுந்து வணங்க அனுமதிக்க கூடாது என்கிறது சாஸ்திரம். இந்த சாஸ்திரங்களை அறிந்த ஞானிகள், மகான்கள் தங்கள் பாதங்களில் யாரையும் விழுந்து வணங்க கூற மாட்டார்கள். மனிதனாக பிறந்த அனைவருமே பாவம் செய்தவர்கள் தான். அப்படி பாவங்களை செய்து விட்டு மகான்களின் காலில் விழுந்து வணங்கினால் உங்களின் பாவம் அவர்களை சேரும். அனைத்தையும் அறிந்தவர்கள் இதை ஏற்பதில்லை.

- Advertisement -

புதிய வீடுகட்டி கிரஹபிரவேசம் செய்வதற்கு கோமாதாவை உள்ளே அழைப்பதும் இதனால் தான். மகாலக்ஷ்மியை வீட்டிற்குள் வரவழைக்க, கோமாதாவின் திருப்பாதமானது வீட்டில் பட வேண்டும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற வேண்டும். இந்த காரணங்களால் பசுமாட்டை வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். நம் முன்னோர்கள் கற்பித்த பாடங்கள் எல்லாமே செல்வ வளம் பெருகி நான்றாக வாழ துணை புரியும். ஆனால் இன்று பலர், மூட நம்பிக்கை என்று இவற்றை ஒதுக்கி வைத்து அல்லல்பட்டு கொண்டுள்ளனர்.

gomatha

பெண்களின் பாதத்தில் இருக்கும் மஹாலக்ஷ்மி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமாக இல்லாத பாதத்தில் மஹாலக்ஷ்மி இருக்க விரும்புவதில்லை. அதனால் அடிக்கடி கால்களை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண்களின் பாதத்தை விட பெண்களின் பாதம் பெரும்பாலும் சுத்தமாக தான் இருக்கும். அனைத்து வேலைகளும் இழுத்து போட்டுக் கொண்டு ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பெண்களின் பாதத்தில் எப்போதும் வலி நிறைந்து இருக்கும். அந்த வலி தான் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி தந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

patha-poojai

பாத பூஜைகள் செய்வதும், ஆசீர்வாதம் வாங்குவதும் பெரியவர்களின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல அவர்களின் பாதத்தில் இருக்கும் மஹாலக்ஷ்மியின் அருளும் சேர்ந்து நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாதமானது எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தேய்ந்து போகும் அளவிற்கு விட்டுவிட கூடாது. அவ்வாறு தேய்ந்து போனால் வீட்டில் செல்வமும் வற்றி வறுமை உண்டாகும். ஆகையால் உங்கள் பாதங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
நாளை வைகாசி 1 இப்படி கும்பம் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to keep your feet safe. Patham. Patham in Tamil. Patham paramarippu. Keep your feet safe.

- Advertisement -