இந்தப் பூவை சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால், தடைபட்ட காரியமானது 11 வாரங்களில் வெற்றி அடையும்.

எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அந்த காரியமானது எடுத்த முதல் மார்க்கத்திலேயே வெற்றி அடைந்துவிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் எந்த ஒரு செயல்பாடும் தொடங்கிய மார்க்கத்திலேயே வெற்றி அடைந்து விடும் என்ற எண்ணத்தை நமக்குள் வளர வைக்கக்கூடாது. தோல்வி என்ற கசப்பை சுவைக்கும் போது தான், வெற்றி என்ற இனிப்பு நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

sivan

அந்த இறைவன் சில சமயங்களில் நம்முடைய மனவலிமையை சோதித்துப் பார்ப்பதற்காக கூட நமக்கு தோல்வியை தரலாம். தோல்வியைக் கண்டு அஞ்சாமல் எவன் இருக்கிறானோ, அவனுக்கு தான் வெற்றியை தர வேண்டும் என்று கூட அந்த இறைவன் நினைத்திருக்கலாம். ஆகவே, தோல்வியை கண்டு பயப்படாமல் எவரொருவர், வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றாரோ அவர் தான் வாழ்க்கையில் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நமக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோதனைகளை வென்றால் தான் சாதனை படைக்க முடியும்.

உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட கஷ்டமாக இருந்தாலும், நஷ்டமாக இருந்தாலும் அல்லது வேறு வகையில் உங்கள் வாழ்க்கையை முன்னேற விடாமல் இருக்கும் எந்த தடையாக இருந்தாலும் அதனை வெற்றியடையச் செய்ய எந்த பூவை சிவபெருமானுக்கும் சூட்டினால் வெற்றி அடையலாம், என்பதை பற்றியும், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் குறிப்பிட்ட இந்த ஒரு பூவை முருகப்பெருமானுக்கு சாத்தினால் நல்ல பலனை அடையலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

senbaga-poo

எல்லோருக்கும் வெற்றியை தேடித்தரும் அந்த பூ செண்பகப் பூ. சிவபெருமானுக்கு எந்த தினத்தில் வேண்டும் என்றாலும் இந்தப் பூவை வைத்து பூஜை செய்யலாம். அது நமக்கு நல்ல பலனை தேடித்தரும். சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த இந்த செண்பகப்பூவால் அர்ச்சனை செய்து மனதார உங்களது வேண்டுதல்களை வைத்துப் பாருங்கள். 11 வாரங்களில் அதற்கான பலனை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.

- Advertisement -

இதைப்போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூவினை முருகப்பெருமானுக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் முருகனுக்கு இந்தப்பூவை அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு.

sevvai-murugan-peruman

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மட்டும்தான் இந்த செண்பகப் பூவை, முருகப்பெருமானுக்கு சாத்தி வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் மனதில் இருக்கும் எந்த வேண்டுதல்களை வைத்து வேண்டினாலும் அதற்கான பலன் கட்டாயம் கிட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்தப் பூவை குறிப்பிட்ட இந்த வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டம் தீர்ந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

senbaga-poo1

இந்தப் செண்பகப் பூ வானது கடைகளில் கிடைப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். இருப்பினும் உங்களுக்கு தெரிந்த பூ கடைக்காரர்களிடம் சொல்லி வைத்தால் கட்டாயம் கொண்டு வந்து தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செண்பகப் பூ வானது கிடைக்கவில்லையே! என்று முயற்சியை விட்டுவிடாமல், அந்த பூவை தேடி கண்டுபிடித்து இறைவனுக்கு சாத்தி, முதல் வெற்றி வாகை சூட்டினால், அடுத்தடுத்து எடுக்கும் முயற்சிகளெல்லாம் நிச்சயம் வெற்றி அடைந்து விடும் தானே! பூவைத் தேடி கண்டு பிடிப்பதில் இருந்து, வாழ்க்கையைத் தேடிக் கண்டுபிடிப்பது வரை விடா முயற்சி ஒன்று மட்டும்தான், விஸ்வரூப வெற்றியைத் தேடித் தரும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, நீங்கள் செய்யும் இந்த பாவச்செயல் கூட ஒரு காரணம்தான்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Shenbaga poo for which god. Shenbaga poo flower. Shenbaga poo in Tamil. Shenbaga poo uses. Shenbaga flower benefits in Tamil.