முஸ்தாக் அலி டி20 தொடர் : கெயிலை மிஞ்சிடுவார் போல இருக்கே ஷ்ரேயாஸ் ஐயர் 147 ரன்கள் குவித்தார். எத்தனை சிக்ஸ் தெரியுமா ? அணியின் ஸ்கோர் எவ்வளவு ? என பிரமிப்பூட்டும் தகவல் உள்ளே

Shreyas

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வெற்றியுடன் நாடு திரும்பியது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் 24ஆம் தேதி துவங்க இருக்கிறது.

Iyer

இந்நிலையில் தற்போது இந்தியாவிற்கும் இருக்கும் மாநில அணிகள் சையது முஷ்டாக் அலி டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணியின் சார்பாக இந்திய அணியின் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்று விளையாடினர்.

கடந்த 21ஆம் தேதி சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே 11ரன்னும் மற்றும் பிரிதிவி ஷா 10 ரன்களும் அடித்தனர். அதன் பிறகு களமிறங்கிய ஐயர் 55 பந்துகளில் அதிரடியாக ஆடி 147 ரன்கள் அடித்தார். இதில் 15சிக்ஸர்கள் அடங்கும். மேலும், இந்த 15 சிக்ஸர்களில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசினார்.

Iyer 1

இவரின் இந்த அதிரடி ஆட்டம் காரணமாக மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 258 ரன்களை குவித்தது. பிறகு ஆடிய சிக்கிம் அணி இந்த இமாலய இலக்கை துரத்த முடியாமல் 104 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், மும்பை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்கலாமே :

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டும். ஆனால், இதை மட்டும் விட்டுக்கொடுக்க கூடாது – மல்யுத்த வீரர் சுஷில் குமார்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்