இவ்வளவு தான் வாழ்க்கை. சித்தர்கள் கூறிய ரகசியம்.

பிறப்பு இறப்பு:
பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்து தான் ஆகவேண்டும். பிறந்தவர்கள் இந்த பூமியிலேயே தங்கி விட்டால், புதியதாக பிறப்பவர்களுக்கு இடம் ஏது. பிறப்பு ஒன்று இருந்தால் அதற்கு இறப்பு என்ற ஒன்று நிச்சயம் உண்டு. மனிதனுக்கு மட்டும் அல்ல இந்த உலகத்தில் இருக்கும் புழு, பூச்சு, தாவரம், செடி கொடி அனைத்திற்கும் இது பொருந்தும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே இருக்கும் இந்த சிறிய வாழ்க்கை எதற்காக என்று சிந்திப்பவர்கள் சித்தர்கள் ஆகிறார்கள். பிறந்தவர்கள் இறந்து விட்டால், அந்த உடலுக்கு மட்டும்தான் அழிவு. அந்த ஆத்மாவானது, தான் செய்த பாவ புண்ணிய கணக்கின்படி திரும்பவும் உயிர்ப்  பெறத்தான் செய்யும். இதைதான் சித்தர்கள் பிறந்தன இறக்கும். இறந்தன பிறக்கும் என்று கூறுகிறார்கள்.

தோன்றுவதும் மறைவதும்:
நம் உலகத்தில் இருக்கும் அனைத்து விதமான இயக்கங்களும் தோன்றி மறைவதில் தான் அடங்கியுள்ளது. வெளிச்சம் தோன்றினால் இருள் மறையும். இருள் தோன்றினால் வெளிச்சம் மறையும். கஷ்டம் தோண்டறினால் சந்தோஷம் மறைந்துவிடும், சந்தோஷம் தோன்றினால் கஷ்டம் மறைந்துவிடும். தோன்றுவதும் மறைவதும் மனித வாழ்வின் இயல்பு. இதைத்தான் சித்தர்கள் தோன்றின மறையும்: மறைந்தன தோன்றும் என்று கூறியுள்ளார்கள்.

ஏற்றத்தாழ்வு
வாழ்க்கையில் ஒருவன் உயர்ந்து செல்வதும் நிலையானதல்ல. தாழ்ந்து போவதும் நிலையானதல்ல. மேலே உள்ளவன் ஒருநாள் வாழ்க்கைச் சக்கரத்தில் கீழே இறங்கி வந்துதான் ஆகவேண்டும். கீழே உள்ளவன் ஒருநாள் வாழ்க்கை சக்கரத்தில் மேலே சென்றுதான் ஆகவேண்டும். இந்த வாழ்க்கையானது தேய்பிறை வளர்பிறை போல ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து தான் இருக்கும். இதைத்தான் சித்தர்கள் பெருத்தன சிறுக்கும்: சிறுத்தன பெருக்கும் என்று கூறியுள்ளார்கள்.

Siddhar

மறப்பதும் நினைப்பதும்
ஒரு மனிதனுக்கு மறதி மட்டும் இல்லையென்றால் அவனால் வாழவே முடியாது. அதே போல் நினைவாற்றல் என்பது இல்லை என்றாலும் வாழ முடியாது. (பல வருடங்களுக்கு முன்பு நடந்த துக்கத்தை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு தினம் தோறும் அழுது கொண்டே இருந்தால் வாழமுடியுமா) நமது நினைவாற்றலை முழுமையாக இழந்து விட்டாலும் வாழ்வது கடினம். இதைத்தான் சித்தர்கள் உணர்ந்தன மறக்கும்: மறந்தன உணரும் என்று கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

விரும்பினால் விலகும். விலகினால் விரும்பும்
நாம் எந்த வாழ்க்கையை வாழவேண்டும் என்று நினைக்கின்றோமோ அது நம்மை விட்டு விலகி சென்று கொண்டேதான் இருக்கும். எந்த வாழ்க்கை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ அதை நம் கையில் கொண்டுவந்து சேர்த்து விடும் விதி. வெறுப்பன உவப்பாம்: உவப்பன வெறுப்பாம் என்கிறது சித்தர் பழமொழி.

karuvurar Siddhar

இவையெல்லாம் தான் வாழ்க்கை என்பதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இவைகளை கடந்து நம்மால் வாழ முடியுமா? என்று கேட்டால், அது முடியாது. பிறந்தவர்கள் இறந்து விட்டால் நாம் அழத்தான் செய்வோம். வெற்றி அடைந்தவர்கள், தோல்வியடைந்தால் அதன் மூலம் துக்கம் ஏற்படத்தான் செய்யும். இவையெல்லாம் இயற்கைதான். ‘இயற்கை தரும் துக்கங்களுக்கு வருத்தப்பட்டு’, ‘இயற்கை தரும் சந்தோஷங்களுக்கு இன்பம் அடைபவன்’ மனிதனாக வாழ்கின்றான். இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் ஒரே நிலையில் இருப்பவன் யோகியாக மாறி விடுகின்றார். இதுதான் வித்தியாசம்.

இதையும் படிக்கலாமே
காணிக்கை செலுத்துவதன் மூலம் இறைவனின் அருளை முழுமையாக பெற்றுவிட முடியுமா? இந்த கதையை படியுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Siddhargal koriya valkai ragasiyam Tamil. Siddhargal koorum life secreat Tamil. Siddhargal koorum vazhkkai Tamil. Vazhkkai thathuvam in Tamil. Valkai thathuvam koorum siddhargal.