உங்கள் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

vasal-kathavu-kuladheivam

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிராக இன்னொரு விஷயம் இருக்கும். இன்பம் என்றால் துன்பமும், நல்லது என்றால் கெட்டதும் இருக்கிறது. அதே போல தான் நேர்மறை ஆற்றல்களும், எதிர்மறை ஆற்றல்களும் இருக்கின்றன. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது போல இந்த பிரபஞ்சம் முழுக்கவும் ஒவ்வொரு அணுவிலும் கடவுள் இருக்கின்றார். அதுவே வீடு என்று எடுத்துக் கொள்ளும் பொழுது என்ன நடக்கிறது? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

praying-god

வீடு என்று வரும் பொழுது நாம் வீட்டில் எப்படி நடந்து கொள்கிறோம்? நம்மிடம் இருக்கும் எண்ணங்கள் எப்படியானது? என்பதை பொறுத்து தான் வீட்டில் நேர்மறை அதிர்வுகள் உண்டாகின்றன. நல்ல விஷயங்களும், இறைவனுக்கு பிடித்த விஷயங்களும் ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்தால் அங்கு சாதாரணமாக தெய்வ நடமாட்டம் நிச்சயம் இருக்கும். ஆனால் அதுவே நேர்மறை ஆற்றல்களுக்கு எதிராக நாம் செயல்படும் பொழுது தெய்வ நடமாட்டம் குறைகிறது. மற்றபடி எல்லா இடங்களிலும் தெய்வம் இருக்கின்றது என்பது தான் உண்மை.

எந்த ஒரு வீட்டிலும் இருள் சூழ்ந்து, கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தால் அந்த வீட்டில் தெய்வ நடமாட்டம் குறைகிறது என்கிறது சாஸ்திரம். பூட்டிய வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் தான் அதிகரித்து காணப்படும். அங்கு விஷ ஜந்துக்களும், விஷம் பூச்சிகளும் குடிகொள்ள ஆரம்பித்துவிடும். ஒரு வீட்டில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் அடிக்கடி வருகிறது என்றால் எந்த வீட்டில் தெய்வ கடாக்ஷம் குறைகிறது என்று அர்த்தமாகிறது. வீட்டை எப்பொழுதும் சத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமலும் வைத்துக் கொண்டால் அந்த வீட்டில் எந்த விதமான துர் சக்திகளும், விஷ ஜந்துக்களும் நுழைய முடியாது.

pooran

நீங்கள் சாதாரண வீட்டில் இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தாலும் ஜன்னல் கதவுகளை திறந்து பஞ்ச பூதங்களும் உள்ளே வரும்படி செய்ய வேண்டும். கொஞ்ச நேரத்திற்காவது இப்படி பஞ்ச பூதங்களை உள்ளே விடுங்கள். முந்தைய காலகட்டத்தில் முற்றம் வைத்த வீடுகள் அமைப்பதை பார்த்திருப்போம். மழை, காற்று, வெளிச்சம் ஆகிய அத்தனையும் வீட்டிற்குள் வந்து வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இப்படியான வீடுகளில் எந்த விதமான எதிர்மறை ஆற்றல்களும் நுழைய செய்யாது. நல்ல அதிர்வுகள் அதிகமாக காணப்படும். அதனால் தான் அவர்கள் மென்மேலும் மகிழ்ச்சியுடனும், முன்னேற்றத்துடன் காணப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் சிறிய வீடுகளில் இருக்கும் ஜன்னலை கூட திறப்பது இல்லை.

- Advertisement -

எந்த ஒரு வீடு பஞ்ச பூத சக்திகளும் உள்ளே வந்து எளிதில் வெளியே போகுமாறு அமைக்கப்பட்டிருக்கிறதோ! அங்கு தெய்வீக நறுமணம் கமழும். சிறிய வீடாக இருந்தாலும் கொஞ்ச நேரம் ஜன்னல் கதவுகளைத் திறந்து பாருங்கள். வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறும். பூஜை அறையில் குங்குமம், அத்தர், விபூதி, ஜவ்வாது போன்ற வாசனை மிகுந்த பொருட்களை பயன்படுத்துங்கள். வீட்டை கோவில் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

kamatchi-amman-TEMPLE

கோவில்களில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க காரணம் அங்கு இருக்கும் நறுமணப் பொருட்களும், இசைக்கும் மங்கள ஒலிகளும் ஆகும். அது போல அனைவரும் வீட்டில் மங்கல ஓசைகளும், இனிய வார்த்தைகளும் பேச வேண்டும். அசுபகுண மற்றும் அநாகரீக வார்த்தைகளை பேசும் வீட்டில் கட்டாயம் தெய்வ நடமாட்டம் குறையும். அங்கு வறுமை தாண்டவமாடும், வருமான தடை ஏற்படும். நல்ல சொற்களை பேசி வீட்டை நறுமணம் மிக்க கோவில் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

mahalakshmi3

இப்படி இருக்கும் வீட்டில் தெய்வீக நடமாட்டம் இருப்பதை நிச்சயம் உணர முடியும். அந்த வீட்டில் எதுவும் செய்யாவிட்டாலும் அங்கு ஒரு நல்ல வாசம் வீசும். இதை வைத்தே உங்கள் வீட்டில் தெய்வீக நடமாட்டம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் எதுவும் செய்யாமல் ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசினால் அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து உள்ளன என்று அர்த்தம். எப்பொழுதும் இருள் சூழ்ந்த நிலையில் வீட்டை வைத்து இருக்காதீர்கள், அழுக்கு துணி, ஈரத்துணி போன்றவற்றை சேகரிக்காதீர்கள். அவ்வபோது அதனை என்ன செய்ய வேண்டுமோ செய்து அப்புறப்படுத்தி விடுங்கள். தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக தண்ணீர் செலவழிக்கும் வீட்டில் தெய்வ நடமாட்டம் குறையும்.