எக்காரணத்தைக் கொண்டும் சமையலறைக்குள் பெண்கள் இப்படி நுழையவே கூடாது. வீட்டில் சிக்கலான பிரச்சனைகள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்!

kitchen-and-milk
- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் இன்றளவில் சிக்கலான பிரச்சினைகள் நிறையவே உள்ளது. அதாவது குழப்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை, தெளிவான முறையில் குழப்பம் இல்லாமல் எப்படி வாழ்வது என்று தெரியாமல் நாம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றோம். மனிதர்களுக்கு கஷ்டம் என்பது வரலாம். ஆனால், அந்த பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது. சிக்கலான பிரச்சனைகள் இருந்தால் கூட, அதில் இருந்து சீக்கிரமே வெளிவர வேண்டும்.

women8

சில பேருக்கு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அது பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும். வீட்டில் சிக்கலான பிரச்சனை வருபவதற்க்கு பெண்கள் செய்யக் கூடிய எந்த ஒரு தவறும் காரணமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது எந்த தவறு? தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

முதலாவதாக பெண்கள் வீட்டில் சிக்குப் பிடித்த தலையோடு இருக்கக் கூடாது. எந்த வீட்டு பெண்களின் தலைமுடி சிக்கு பிடித்து இருக்கின்றதோ, அந்த வீட்டில் சிக்கல்கள் சிக்கிக்கொண்டு தான் இருக்கும். சில பெண்களின் தலை முடி இயற்கையாகவே சிக்கு தன்மை கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் அந்த முடியை நன்றாக சீவி எப்போதுமே பின்னி வைத்திருப்பது நல்லது.

kitchen1

குறிப்பாக காலை எந்திரிக்கும் போது பெண்களின் தலைமுடி சிக்குப் பிடித்த நிலைமையில்தான் இருக்கும். அந்த சிக்குப் பிடித்த தலையோடு எக்காரணத்தைக் கொண்டும் சமையலறைக்குள் செல்லவே கூடாது. சிக்குப் பிடித்த தலையோடு சமையலறைக்கு பெண்கள் செல்லக்கூடிய வீட்டில் கட்டாயம் சிக்கல்கள் தீராது.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் காலையில் எழுந்து குளிக்காமல் சமையலறைக்குள் செல்லக்கூடிய பெண்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. குளிக்க முடியவில்லை என்றாலும், பல் தேய்த்து விட்டு முகம் அலம்பி விட்டு தலையை திருத்தி கொண்டுதான் சமையலறைக்குள் செல்ல வேண்டும். சமையலறையில் முதலில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு சமையலை தொடங்க வேண்டும்.

deepam

காலையில் பூஜை அறையில் தீபம் ஏற்ற முடியாதவர்கள், வரவேற்பறையில் பூஜை அறை இருக்கின்றது, அங்கு எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் காலையில் விளக்கு ஏற்ற முடியாது என்று நினைப்பவர்கள் கூட, காலை வேளையில் சமையல் அறையில் தீபம் ஏற்றலாம். பெண்கள் குளிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, சுத்தபத்தமாக இருக்கும் சமயத்தில் தாராளமாக சமையல் அறையில் தீபம் ஏற்றலாம். இது பூஜை அறையில் தீபம் ஏற்றிய பலனை நமக்கு கொடுக்கும்.

இரவு தூங்க செல்லும் போது, சமையலறை சிங்க்கிற்க்குள் ஒரு சிறிய அகல் வைத்து, அதில் ஒரு சாதாரண கற்பூரம், ஒரு பச்சை கற்பூரம், இரண்டு கிராம்பு இந்த 3 பொருட்களையும் பற்ற வைக்க வேண்டும். உங்கள் சமையல் அறையை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள், எதிர்மறை எண்ணங்கள், குழப்பங்கள், சிக்கல்கள் இவை அனைத்தும் இந்த நெருப்பில் பொசுங்கி விடும். சமையலறையில் எதிர்மறை ஆற்றல் என்பது கட்டாயம் குடிகொண்டிருக்கும். அதை விலக்கி விட்டால் நம் வீடு சுபிட்சம் அடையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -