இத்தனை நாட்களாக வீட்டில் சிலை வைத்து வழிபாடு செய்யும் உங்களுக்கு, இந்த ஒரு விஷயம் தெரியாதா? சந்தர்ப்பம் கிடைத்தும், இன்று, இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்.

pillaiyar
- Advertisement -

உங்களுடைய மனது அமைதியற்ற சூழ்நிலையில் சஞ்சலமாக உள்ளது. எதனால்தான் நீங்கள் கோபப் படுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை. எதைத் தொட்டாலும் தோல்வி. எதை தொட்டாலும் அலைச்சல். பிரச்சனை என்று சில பேருக்கு இனம்புரியாத குழப்பங்கள் இருக்கும். அவர்களால் எப்பாடு பட்டும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவே முடியாது. எப்போதுமே நெருப்பில் நின்று கொண்டு இருப்பது போல் தவித்துக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட மனதை உடனடியாக குளிரச் செய்து, நிம்மதி அடைய வைப்பது எப்படி. எப்போதும் சாந்தமாக இருப்பதற்கு ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pillaiyar-manai

உங்களுடைய வீட்டில் சிறிய அளவில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டாலும் சரி, அல்லது மற்ற தெய்வங்களின் திருவுருவ சிலைகளை வைத்து வழிபட்டாலும் சரி, அந்த சிலைக்கும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் உள்ள விக்ரகங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -

அதிகப்படியான குளிர்ச்சியைக் கொண்ட ஒரு பொருள் தான் இந்த வெட்டி வேர். வெட்டிவேர் வாங்கி அதை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, ஒரு நூலில் மாலை கட்டிக்கொள்ள வேண்டும். எப்படி கட்டுவது? அம்மன் கோவில்களில் வேப்பிலையை ஆடையாக கட்டிக் கொள்வார்கள் அல்லவா? வேண்டுதலை நிறைவேற்றும் போது. நீளவாக்கில் பூ கட்டுவது போல். அதேபோல் இந்த வெட்டிவேரையும் கட்டிக்கொள்ள வேண்டும். கட்டிய இந்த வெட்டி வேரை தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து விட்டு அதன் பின்பு அந்த வெட்டிவேர் மாலையை உங்கள் வீட்டில் இருக்கும் விக்ரகங்களுக்கு வஸ்திரமாக அணிவிக்க வேண்டும்.

vettiver1

இதை சுவாமிக்கு மாலையாக போட வேண்டாம். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். விக்கிரகங்களின் இடையில் வேட்டி கட்டுவது போல அப்படியே கட்டி விட்டு விடவேண்டும். அப்போது அந்த விக்ரகத்திற்கு இது ஆடை போல அமைந்து விடும். சிலபேர் வீட்டில் இருக்கும் விக்ரகங்களுக்கு சிறிய அளவில் வேட்டி புடவை போன்ற வஸ்திரங்களை வாங்கி கட்டி வைத்திருப்பார்கள். அதன் மேலே இந்த வெட்டிவேர் மாலையையும் உடை போல இறைவனுக்கு அணிவித்து விட வேண்டும். உங்கள் வீட்டில் சிறிய விக்ரகங்களுக்கு வஸ்திரம் இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த வெட்டிவேரை மாலையாக கட்டி விடுங்கள்.

- Advertisement -

வீட்டின் அருகிலிருக்கும் கோவில்களில் உள்ள விக்ரகங்களுக்கும் இதை நம் கையாலேயே கட்டிக்கொடுத்து சாத்தலாம். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள புரோகிதரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, மாலையை கட்டிக்கொண்டு போய் கொடுத்து நீங்கள் கட்டிய மாலையை இறைவனுக்கு கட்டிவிட சொல்ல வேண்டும்.

vettiver

இறைவன் சன்னிதானத்தில், அந்த விக்ரகத்தில் நிலவக்கூடிய ஒரு குளிர்ச்சி, நம்முடைய மனதிலும் வரத் தொடங்கிவிடும். வீட்டிலுள்ள விக்கிரகங்களுக்கு இந்த வெட்டிவேர் வஸ்திரத்தை அணிவித்தாலும் உங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள விக்ரகங்கள் எப்போதுமே குளிர்ந்த நிலையில் இருக்கும். அந்த இறைவனிடத்தில் இருக்கக்கூடிய குளிர்ச்சியானது உங்களுடைய மனதிலும் உடனடியாக வரத்தொடங்கும். மன நிம்மதி அதிகரிக்கும். கோபம் குறையும். நிம்மதியான வாழ்வை பெற இந்த வழிபாட்டினை உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -