வீட்டிலேயே இருந்தால், பெண்கள் அழகா இருக்க கூடாதா என்ன? லாக் டவுனில் வீட்டில் இருந்தாலும், காலையில் பெண்களின் முகம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

face

அழகான, ஒரு அழகு குறிப்பு பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையாகவே அழகாக இருக்கும் பெண்கள், வெளியே செல்லும் போது தான் தங்களுடைய முகத்தை ஜொலிக்க வைத்து, பொலிவுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. வீட்டில் இருக்கும் போதும் பெண்கள் காலையில் கண் விழித்தவுடன் தங்களது முகத்தை அழகாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம் வீட்டிற்கு யாரும் வரப்போவதில்லை, நாமும் வீட்டை விட்டு வெளியே செல்லப் போவதில்லை, லாக்டவுன் என்பதற்காக எண்ணெய் வடிந்த முகத்துடன், பெண்கள் இருக்கக் கூடாது.

face-skin

இதற்கு சிம்பிளாக ஒரு பியூட்டி டிப்ஸ். காலையில் எழுந்து பல்தேய்த்து முகம் கழுவியவுடன் பெண்கள் செய்யும் வேலை டீ அல்லது காபி போடுவதாக தான் இருக்கும். பாலை காய்ச்சும்போது அந்த பாலில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் அளவு மட்டும், காய்ச்சாமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்ச்சிய பாலை இந்த குறிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது.

அடுப்பில் பால் சூடாகும் அந்த கொஞ்ச நேரத்தில், இந்த பச்சை பாலை உங்களுடைய முகத்தில் எடுத்து நன்றாக தேய்த்து மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். கழுவ வேண்டும் என்ற அவசியமே கிடையாது. நீங்கள் முகத்தில் பால் போட்டது யாருக்கும் தெரியாது. ஒரு உருளைக்கிழங்கை எடுத்து இரண்டாக வெட்டி அந்த உருளைக்கிழங்கை கொண்டு அப்படியே உங்களுடைய முகத்தில் மசாஜ் செய்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் அந்த உருளைக்கிழங்கில் பாலைத் தொட்டு கூட மசாஜ் செய்து கொள்ளலாம்.

milk1

இதுவும் அப்படியே இருக்கட்டும். இதையும் உங்களுடைய முகத்தில் போட்டிருப்பது மற்றவர்களுக்கு தெரியாது. உருளைக்கிழங்கு ஜூஸ் இந்த பச்சை பாலும் சேர்ந்து உங்களுடைய முகத்தை பொலிவாக மாற்றிவிடும். 5 நிமிடங்கள் பால் காய்ச்சும் நேரத்தில் இந்த மசாஜை செய்தால் கூட போதும். இந்த மசாஜ் செய்த பின்பு முகத்தை போய் தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டு கழுவ வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள். நாள் முழுவதும் உங்களது முகம் பொலிவாக இருக்கும். என்ன, என்றைக்கும் இல்லாம இன்றைக்கு உன்னுடைய முகம் பொலிவாக இருக்குன்னு என்று வீட்ல இருக்கிறவங்க நிச்சயம் கேட்பார்கள்.

இதையெல்லாம் ஒரு டிப்ஸ் என்று நினைக்காதீர்கள். உங்களுடைய முகம் எப்படி இருக்கின்றது என்பதை முதலில் கண்ணாடியைப் பாருங்கள். வீட்டிற்குள்ளேயே இருந்து உங்கள் அழகிற்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை நீங்கள் கொடுக்காமல் இருப்பது, அப்போது தான் புரியும். அழகு என்பது அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக கிடையாது. நாமே நம்முடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது அழகாக இருக்கும் பட்சத்தில் ஒரு சுறுசுறுப்பு நம்மை அறியாமல் வரத்தான் செய்யும்.

face4

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், முகத்தில் கருப்பு புள்ளிகள் உள்ளவர்கள், கழுத்தில் கருநிறம் உள்ளவர்கள், வாயை சுற்றி கருவளையம் உள்ளவர்கள் இப்படி யார் வேண்டுமென்றாலும் இந்த டிப்ஸை ட்ரை பண்ணிப் பார்க்கலாம். தொடர்ந்து முயற்சி செய்து வரும் பட்சத்தில் பெஸ்ட் ரிசல்ட்ஸ் கட்டாயம் கிடைக்கும்.