அடடா! இது தெரியாமலா இத்தனை நாட்கள் சமையல் அறையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்த விஷயங்கள் தெரிந்தால் நீங்களும் சமையலறை குயின் தான்.

cooker

ஆமாங்க, சமையல் அறையில் சில ரகசிய டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டோமே ஆனால் நம்முடைய சமையலறைக்கு நாம்தான் ராணி. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்கள் வீட்டு சமையலறையில் மட்டுமல்ல, பலரது வீட்டு சமையல் அறையிலும், சமைப்பதில் நிரையவே பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அதில் சில பிரச்சினைக்கான தீர்வை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலாவதாக, குக்கர் பிரச்சனைக்கு தீர்வை பார்த்துவிடுவோம். எல்லார் வீட்டிலும் பருப்பு வேக வைக்கும்போது மஞ்சள் தூளை போட்டு பருப்பை வேக வைப்போம்.

cooker1

பருப்பை குக்கரில் மூன்று விசில் வைக்கும்போது பொங்கி வராத குக்கரே கிடையாது. எப்படித்தான் தண்ணீர் சரியான அளவு வைத்தாலும், குக்கரில் இருந்து மஞ்சள் நிற தண்ணீர் பொங்கி வழிந்து சமையலறை தரை, அடுப்பு, டைல்ஸ் எல்லா இடத்தையும் அசுத்தப்படுத்தி விடும். அதுமட்டுமல்லாமல் அந்த குக்கரின் மூடியை தேய்ப்பதற்குள் நமக்குப் போதும் போதும் என்றாகிவிடும். இதற்கு ஒரு தீர்வு உண்டா என்று கேட்கும் பெண்மணிகளுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு டிப்ஸ்.

எப்போதும் போல பருப்பை கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது இந்த பருப்பின் மேல் ஒரு சிறிய அளவு கிண்ணத்தை வைத்து விட வேண்டும். அதன் பின்பு குக்கரை மூடி போட்டு விடுங்கள். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து விடுங்கள். விசில் வரட்டும். உங்கள் வீட்டு குக்கர் பொங்கி வழிகிறதா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

cooker2

இரண்டாவது டிப்ஸ். எல்லார் வீட்டிலும் இட்லி செய்யும் போது அது மிஞ்சி போவது வழக்கம் தான். அந்த இட்லியை வைத்து இட்லி உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் அந்த இட்லி உப்புமா செய்வது எப்படி? பழைய இட்லிகளை ஒரு நிமிடம் தண்ணீரில் மூழ்க போட்டு அதன் பின்பு, அந்த இட்லியை எடுத்து நன்றாக தண்ணீரை வடிகட்டிவிட்டு உதிர்த்து இட்லி உப்புமா செய்து பாருங்கள். மிகவும் சாஃப்டாக சூப்பராக வரும்.

எல்லோர் வீட்டிலும் புதிய துடிப்பும் வாங்கினால் அதில் இருந்து தூசு கொட்டும். இந்த தூசிகள் பெரிய தொல்லையாக இருக்கும். புதிய துடைப்பத்தை வாங்கி நன்றாக உதறி, தலை சீவும் சீப்பை கொண்டு அந்த துடைப்பத்தை நன்றாக சீவி விட வேண்டும். ஒரு பழைய சீப்பை எடுத்து இதற்காகவே வைத்துக் கொள்ளுங்கள். அதாவது சீப்பின் பெரிய பல் பக்கம் துடைப்பத்தை வைத்து, நன்றாக சீவி விடுங்கள். முக்கால்வாசி தூசி இதிலேயே போய்விடும்.

broom

மீதம் கொஞ்சம் தூசி, இந்த துடைப்பத்தை ஆட்ட ஆட்ட கொட்டிக் கொண்டே தான் இருக்கும். ஒரு அகலமான பட்கெட்டில் துடைப்பத்தை போட்டு, தண்ணீர் ஊற்றி 2 லிருந்து 3 முறை அந்த துடைப்பத்தை நன்றாக அலசி வெயிலில் காயவைத்து எடுத்து அதன் பின்பு பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் தூசி 80 சதவிகிதம் குறைந்து இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.