உளுந்து இருக்கா உங்க வீட்ல! வித்தியாசமான உளுந்து போண்டாவை இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

bonda

உளுந்து 100 கிராம் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளுங்கள் போதும். ஊறிய உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். இந்த உளுந்துன் பாதி அளவு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 1, கறிவேப்பிலை ஒரு கொத்து, தேங்காய் துருவல் 4 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன் இந்த பொருட்களை மட்டும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

bonda2

ஒரு அகலமான பவுலுக்கு இந்த மாவை மாற்றி தேவையான அளவு உப்பு, இரண்டு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து 5 லிருந்து 8 நிமிடங்கள் உங்கள் கையால் மாவை நன்றாக கலந்து கொடுக்கவேண்டும். மாவு ரொம்ப கெட்டியாக இருக்கக் கூடாது. கொஞ்சம் தள தளவென இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

கடாயில் எண்ணெயை வைத்து  கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடானதும், போன்டாவை பொரித்து எடுக்க வேண்டியது தான். ஒவ்வொரு முறையும் தண்ணீரில் கையை நனைத்து இந்த மாவினை அள்ளி, அப்படியே எண்ணெயில் விட்டு, மிதமான தீயில் பொரித்து எடுத்தால், சுட சுட சூப்பரான வித்தியாசமான உளுந்து போண்டா தயார். உளுந்து ஊற வைக்கும் நேரம் மட்டும் தான் எடுக்கும். மத்தபடி பத்து நிமிஷத்துல இந்த போன்றவை நீங்க ரெடி பண்ணிடலாம்.

bonda1

அடுத்தபடியாக ரவையை வைத்து ஒரு ஸ்நாக்ஸ் எப்படி தயார் செய்வது. இதுவும் ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. 1 கப் ரவை, 1/2 கப் தயிர், இந்த இரண்டு பொருட்களையும் முதலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த இந்த கலவையை ஒரு மூடி போட்டு, 15 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள். ரவை, தயிரை நன்றாக உறிஞ்சி சாஃப்டான பதத்திற்கு வந்திருக்கும்.

- Advertisement -

ஆனால் மாவு கொஞ்சம் கெட்டியாக தான் இருக்கும். இப்படியே பக்கோடா செய்தால் சரியான பக்குவத்தில் வராது. 2 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரை ஊற்றி, மீண்டும் ரவையை தளதளவென பிசைந்து கொள்ளுங்கள். அடுத்தபடியாக தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, சோம்பு இவைகளை மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

bonda3

அடுப்பில் கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ந்ததும் இந்த மாவை சிறு சிறு பக்கோடாக்களாக விட்டு பொரித்து எடுத்தால் சுடச்சுட ரவை பக்கோடா தயார். டீ குடிக்கும்போது ஸ்நேக்சாக கொடுத்தால் விருப்பமா சாப்பிடுவாங்க.

bonda4

இந்த இரண்டுமே செய்வதற்கு தேவையான பொருட்களும் மிகவும் குறைவுதான். நேரமும் மிகவும் குறைவுதான். ஆனால் சுவை கூடுதலாகத்தான் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.