தியானத்தின் மூலமாக மனதை ஒருநிலை படுத்த முடியும்? விவரம் இதோ

god--meditation

நம்முடைய மனம் அமைதி பெற, நினைத்த காரியங்கள் வெற்றி பெறவும் வாழ்வில் ஆரோகியமாக வாழ நாம் அன்றாடம் தியானம் செய்து மனதை ஒரு நிலைப்படுத்தினால் நிறைவேறும். இதனைப் பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.

Thiyanam

 

தியானம், செய்வதால் நமது மனம் ஒரு நிலை அடைகிறது. இதனால், நாம் சிந்திக்கும் செயல்களை தெளிவாக செய்வோம். தியானம் செய்வதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும். தியானத்தை நாம் சிறியவர், பெரியவர் என பாகுபாடின்றி எந்த வயது உடையவரும் தியானத்தை செய்யலாம். நீங்கள் எந்த இடத்திலும் தியானத்தை செய்யலாம். இந்த இடத்தில் தான் செய்யவேண்டும் என்று எந்த வித நிபந்தனையும் இல்லை.

 

தியானத்தைப் பற்றி கவிஞர் கூறியுள்ளது மனம் ஒரு குரங்கு அதை தப்பிக்க விட்டால் அது நம்மை தேவையில்லாத பாவங்களை செய்ய வழிவகுத்துவிடும். இதனால், நம் மனதை நாம் எப்பொழுதும் நம் வசமே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தியானத்தை நாம் எளிதில் செய்துவிட முடியாது நமது மனதை நிலைப்படுத்த முடியாமல் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும் அதனை ஒரே நொடியில் நம்மால் கட்டுப்படுத்த இயலாது தினமும் தியானம் செய்வதால் இதை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தி நமது மனதையும் ஒருநிலைப்படுத்த முடியும்.

- Advertisement -

Thiyanam

 

நாம் தியானம் செய்யும் பொழுது நமக்கு இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றாலும் உங்களுக்கு பிடித்தவை, அது எந்த பொருளாக இருந்தாலும் சரி தியானம் செய்யும் பொழுது நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். பயிற்சி செய்யச் செய்ய நம்மால் ஆழமான தியானத்திற்கு செல்ல இயலும். நாம் தியானம் செய்யும் பொழுது பத்மாசனதில் உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டும். படுத்துக்கொண்டோ அல்லது மற்ற ஆசனங்களில் செய்யக்கூடாது. இப்படி செய்வதால் நமது மனநிலை தெளிவடையும் உடல் கூறுகள் அனைத்தும் சீராக செயல்படும் நமது உடல் ஆரோக்கியமும் நாளுக்கு நாள் வலிமை பெறும்.

இதையும் படிக்கலாமே:
செய்வினை பில்லி சூனியத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள அகத்தியர் கூறும் வழிமுறை! விவரம் இதோ

English Overview:
Here we have Simple way to balance our mind in tamil. We have details of Simple way to balance our mind too.