இந்த உலகத்தை காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமான். ஆலகால விஷத்தால் இந்த உலகமே அழியும் பொழுது உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதை உண்டு தன்னுடைய கழுத்தில் வைத்து நீலகண்டனாக காட்சியளிக்கக்கூடிய தெய்வம் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் தரிசனத்தை பெறவும் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவபெருமானின் அருளை பெற
சிவபெருமானின் அருளை பெறுவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன அவற்றுள் மிகவும் எளிமையாக கூறக்கூடியது தான் பிரதோஷ வழிபாடு. பிரதோஷம் ஏற்பட்ட கதைகள் அனைவருக்குமே தெரியும். இந்த பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும் அதே சமயம் மற்ற பிற தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் பிரதோஷத்திற்கு என்று தனி சிறப்புகள் இருக்கின்றன.
இந்த பிரதோஷ தினத்தில் நாம் சிவபெருமானை வழிபடுவது மட்டுமல்லாமல் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். என்னதான் நாம் வழிபாடு செய்தாலும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும். ஆனால் சிவபெருமானை தரிசனம் செய்ய முடியுமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் பலராலும் செய்ய இயலாத ஒரு சூழ்நிலையே இருக்கிறது. அப்படிப்பட்ட சிவபெருமானை தரிசனம் செய்வதற்கு நாம் ஒரு எளிமையான வழிபாட்டை செய்யலாம்.
சிவபெருமானின் தீவிர பக்தர்களாக இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் காணக்கூடிய ஒரு முக்கியமான ஒன்றுதான் மூன்றாம் பிறை. அமாவாசை கழித்து வரக்கூடிய இரண்டாவது நாள் மூன்றாம் பிறை என்று கூறுவார்கள். இந்த மூன்றாம் பிறையை தான் சிவபெருமான் தன்னுடைய தலைக்கு மேல் சூடி இருக்கிறார். எந்த நேரத்தில் மூன்றாம் பிறை தோன்றுகிறதோ அந்த நேரத்தில் நாம் மூன்றாம் பிறையை தரிசனம் செய்ய வேண்டும்.
அப்படி நாம் தரிசனம் செய்யும் பொழுது அந்த மூன்றாம் பிறையை சிவபெருமானாக பாவித்து அந்த மூன்றாம் பிறைக்கு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி வழிபாடு செய்ய சிவனருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். சிவ தரிசனமும் ஏற்படும். முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் இந்த ஜென்மத்தில் செய்திருக்கும் பாவங்களும் முற்றிலுமாக நீங்கும்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை என்பது வரும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் தொடர்ச்சியாக மூன்றாம் பிறை தரிசனம் காணுபவருக்கு அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும் என்றும், அவர்களுடைய கர்ம வினைகள் குறையும் என்றும், மறுபிறப்பு ஆற்ற நிலை உண்டாகும் என்றும், சிவகதி சேருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: காரிய சித்தி தரும் சித்தர் மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சிவன் அருள் கிடைப்பதோடு சிவ தரிசனமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.