பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவன் தவம் செய்த குகை – வீடியோ

Sivan kugai
- Advertisement -

சித்தர்களும் யோகிகளும் இன்றும் பல குகைகளில் தவம் செய்துகொண்டிருப்பது நாம் நன்கு அறிந்ததே. அந்த வகையில் சித்தர்களுக்கெல்லாம் குருவாக அறியப்படும் சிவ பெருமான் தவம் செய்த குகை ஒன்று சுருளிமலையில் உள்ளது. அந்த குகை எப்படி இருக்கிறது. இன்று அந்த குகையில் என்னவெல்லாம் இருக்கிறது. வாருங்கள் இந்த வீடியோவில் பார்ப்போம்.

- Advertisement -
தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

தேனீ மாவட்டத்தில் உள்ள சுருளிமலையில் பல்லாயிரம் சித்தர்கள் வந்து தவம் புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மலைக்கு மகுடம் சூட்டும் வகையில் சிவன் தவம் செய்த குகை இங்கு உள்ளது. கைலாசநாதர் குகை என்றைக்கப்படும் இந்த குகையில் நாம் தவம் செய்தால் நமது கர்ம வினைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

சிவன் தவம் செய்த காலத்தில் அவருக்கு காவலாக இங்கு ஐந்து தலை நாகம் ஒன்று இருந்ததாகவும் அது இன்று கல்லாக மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. கைலாசநாதர் குகையில் இன்றும் சுயம்பு லிங்கம் ஒன்று உள்ளது. அதோடு இந்த மலையில் பல விசித்திரமான குகைகளும் உள்ளன. சிறிய துவாரம் மட்டுமே கொண்ட குகைகளில் இன்றும் சித்தர்கள் தவம் செய்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.K

- Advertisement -