Story : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா ?

sivan

சிவராத்திரியான இன்று நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கதையை பற்றியே தொகுப்பே இந்த பதிவு. இந்த பதிவில் வரும் கதையினை முழுவதுமாக படித்து சிவனை பிராத்தனை செய்யுங்கள் உங்களுக்கு சிவன் அருள் நிச்சயம் கிடைக்கும். “ஓம் சிவாய நம”, கதையை துவங்குகிறேன் தொடர்ந்து வாசித்து சிவனருள் பெறுங்கள்.

sivan

அந்த காலத்தில் ராமர் வனவாசம் சென்ற இடம் தண்ட காரண்யம் காட்டிற்கு அருகில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள கமலாபுரம் என்ற அழகிய ஊர். அந்த ஊரில் ஓர் அழகிய எழில் கொஞ்சும் பொய்கை உள்ளது. அந்த பொய்கைக்கு கலசரஸ் என்று அழகான பெயரும் உண்டு. அந்த குளத்தின் அருகில் நிறைய முனிவர்கள் சிவனை நோக்கி தவமிருந்து வந்தனர்.

அப்படி வழிபட்டவர்களில் ஒருவர் தான் நாம் இன்று தெரிந்து கொள்ளவேண்டிய முனிவர் வித்வஜிஹ்மர். இந்த முனிவர் பல வருடங்களாக திருமணம் செய்யாமல் கூட இறைவனை நோக்கி தவம் இருந்து வந்தார். அந்த சமயத்தில் அவரை சந்திக்க கெளஸ்திமதி ரிஷினு ஒருவர் அவரை காண நேரில் சென்றார். தன்னை சந்திக்க ஒருவர் வந்திருப்பதை அறிந்த வித்வஜிஹ்மர் அவரை சிறப்பான முறையில் வரவேற்று அவரை உபசரித்தார்.

dancing siva

பிறகு, வித்வஜிஹ்மர்யிடம் பேச துவங்கிய கெளஸ்திமதி இந்த இளம் வயதில் எதற்காக திருமணம் முடிக்காமல் கூட இப்படி தவம் செய்து கொண்டிருக்கிறீர்கள் ? நீங்கள் இப்படி செய்வது தவறு.! திருமணம் செய்யாமல் இப்படி இறைவனை நோக்கி தவம் இருந்தால் நீங்கள் இறந்ததுக்கு பின்னால் உங்களுக்கு சொர்க்கத்தில் கூட இடம் கிடைக்காது அதோடுமட்டுமின்றி முன்னோர்களின் சாபமும் உங்களுக்கு வந்தடையும். இதுகூட உங்களுக்கு தெரியாதா ? என்று கேட்டார்.

- Advertisement -

மேலும், இறைவனை நோக்கி கடும் தவம் இருந்த அகத்திய முனிவர் கூட இறந்த பின் சொர்க்கத்திற்கு செல்லவேண்டும் என்று கருதி லோபாமுத்திரை என்ற பெண்ணை தானே உருவாக்கி மணந்துகொண்டார். ஆகையால், நீங்களும் என் மகளான வசுமதியை மணம்புரிந்து இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டும் என்று வித்வஜிஹ்மரிடம் கேட்டுக்கொண்டார் கெளஸ்திமதி.

sivan lingam

அவை அனைத்தையும் பொறுமையாக கேட்ட வித்வஜிஹ்மர் சிறிது நேரம் கழித்து கெளஸ்திமதியிடம் பேசத்துவங்கினார். குடும்பம், குழந்தைன்னு எனக்கு எந்த துன்பமும் வேண்டாம். தனிமையும் தவமுமே எனக்கு போதும் வாழ்வில் வேறு எந்த துன்பமும்,துயரமும் வரக்கூடாது என்றே நான் தவ வாழ்வில் ஈடுபட்டுள்ளேன். இந்த தவவாழ்க்கைக்காக என் தந்தையிடம் இருந்து கூட நான் பிரிந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அப்படி இருக்கையில் எனது கர்மா என்னை தொடர்ந்து வருகிறது என்று கூறினார்.

உடனே கெளஸ்திமதி கூறினார் பாஞ்சாலி, சீதை, அருந்ததி, அனுசுயா அவங்களுக்கு இணையானவள், என் மகள் வசுமதி ஆகையால் என் மகளை நீங்கள் திருமணம் செய்ய நான் என செய்யவேண்டும் என்று கூறுங்கள் நான் செய்கிறேன் என்றார். அதற்கு பதிலளித்த வித்வஜிஹ்மர் ‘மார்க்கண்டேயர், துர்வாசர், சனத்குமாரர்கள், கண்வ மகரிஷி, நாரதர், சுகர் ஆகியோர் திரு மணம் செய்யாமல் வாழ வில்லையா? அவங்க ஏன் கல்யாணம் செய்யாம வாழ்ந்தாங்க? அதுக்கான சிரியான காரணத்தை நீங்கள் எனக்குச் சொன் னால் நான் உங்கள் மகள் வசுமதியைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்’னு சொன்னார் வித்வஜிஹ்மர்.

Siva lingam

பிறகு அங்கிருந்து சென்ற கெளஸ்திமதி இதற்கு பதில் அறிய நாராயணனை நோக்கி தவம் இருந்து அவரை வைகுண்டத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது வித்வஜிஹ்மர் கேட்ட கேள்விக்கு பதிலை நாராயணனிடம் கேட்டு அதற்கு சரியான பதில் வேண்டும் என்று முறையிட்டார். பிறகு அந்த கேள்விக்கு பதிலளிக்க துவங்கினார் நாராயணன். அவர் ஒவ்வொருத்தருக்கான பதிலையும் கூற துவங்கினார்.

மார்க்கண்டேயர் : மார்க்கண்டேயர் பூமாதேவி என்ற ஒரு பெண் குழந்தையை வளர்த்து என்னிடம் கொடுத்துள்ளார்.

துர்வாசர் : துர்வாசரும் குந்திக்கு குழந்தை பாக்கியத்துக்கான ஐந்து மந்திரங்களை தந்துள்ளார்.

Lord Sivan

சனத்குமாரர் : அவர்களுக்கும் இரண்டு வளர்ப்பு பெண் குழந்தைகள் இருந்தனர்

நாரதர் : நாரதர் அவரது வாழ்வில் சிறிதுகாலம் தமயந்தி என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். அதனால் அவருக்கும் இல்லறம் இருந்தது என்றார்.

இதனை அப்படியே வித்வஜிஹ்மரிடம் சென்று கூறு அவர் உன் மகள் வசுமதியை மணந்துகொள்ள சம்மதம் தெரிவிப்பார் என்று ஆசி வழங்கி கெளஸ்திமதியை பூலோகத்துக்கு அனுப்பினார். பூலோகம் திரும்பிய கெளஸ்திமதி நேராக வித்வஜிஹ்மரிடம் சென்று நாராயணன் கூறிய அந்த பதில்களை அப்படியே கூறினார். விடை சரி என்பதால் வித்வஜிஹ்மர் வசுமதியை திருமணம் செய்ய சம்மதித்து மணந்து கொண்டார்.

shiva

பிறகு, வித்வஜிஹ்மரும் வசுமதியும் சிறப்பாக இல்லற வாழ்வில் வாழ்ந்தனர். வசுமதி சிவராத்திரி அன்று சிவனை நேரில் காண விரதம் இருந்து சிவராத்திரி இரவு வேளையில் சிவனின் அருள் பெற்று சிவபெருமானை நேரில் சென்று பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சிவராத்திரியாக இன்று இரவு சிவபுராணத்தை படிப்பது நமக்கு நல்ல பலனை தரும்.

English Overview:
Here we have Maha shivaratri story in Tamil.