கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்பதை உணர்த்தக்கூடிய இந்த ஒரு பாடலை தினமும் பாடினால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

siva-vakkiyar-sivan
- Advertisement -

கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்பதை நீங்கள் எப்பொழுது அறிந்திருக்கிறீர்கள்? ஏதாவது ஒரு ஆபத்து வரும் பொழுது, அதிர்ஷ்டவசமாக அந்த ஆபத்திலிருந்து நாம் தப்பும் பொழுது இறைவன் நம்முடன் இருப்பதாக நாம் உணர்ந்திருப்போம். கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதை இது போன்ற விஷயங்கள் மட்டும் அல்லாமல் நமக்குள் இருக்கும் கடவுளை உணர்வதும் மிகவும் முக்கியமானது. இப்படி நாம் நமக்குள் இருக்கும் கடவுளை உணர்ந்து விட்டால் எந்த சூழ்நிலையிலும் தவறு செய்ய மாட்டோம். அத்தகைய வரத்தை கொடுக்கக் கூடிய இந்த அற்புதமான பாடல் என்ன? இதை யார் எழுதியது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தவறு செய்யாத மனிதனே இந்த உலகில் இல்லை ஆனால் எல்லாவற்றையும் கடந்து ஐம்புலன்களையும் நமக்குள் அடக்கி ஆள தெரிந்தால் நம்மை வெல்ல எவராலும் முடியாது. நம் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாவிட்டால் அவர்கள் வருந்தி அதைப் பற்றி நம்மிடம் கூறும் பொழுது நமக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு கத்தி தொலைந்து விடுகிறோம்.

- Advertisement -

நம்முடைய கடமையை சரியாக செய்யும் பொழுது நாம் மட்டும் அல்லாமல் நம்மை சார்ந்து இருப்பவர்களும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கக்கூடும். மனதை பல வழிகளிலும் அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தி நம் இலக்கை அடைவதில் குறிக்கோளாக இருந்தால் இந்த உலகில் நம்மை விட சிறந்த மனிதன் எவருமில்லை.

இவ்வுலகம் என்பது மாயை அதில் அடங்கியிருக்கும் எல்லாமே இறைவன் தான் என்பதை உணர்த்த கூடிய இந்த அற்புத பாடலை சிவவாக்கியர் சிவவாக்கியத்தில் எழுதியுள்ளார். 114 ஆவது பாடலாக சிவவாக்கியத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் நம்மில், நமக்குள் இருப்பதும் இறைவன் என்று உணர்த்துகிறது. இதை எவர் ஒருவர் அறிகின்றாரோ அவர் தவறு செய்யாத ஒழுக்கமுள்ள மனிதனாகவும், எல்லா உயிர்களுக்கும் பிடித்தமானவராகவும் இருக்கக்கூடும். இதனால் இவ்வுலகையே வெல்லக்கூடிய சக்தி அவருக்கு பிறக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

சிவவாக்கியர் எழுதிய பாடல் இதோ:
பாரடங்க வுள்ளதும் பரந்தவான முள்ளதும்
ஓரிடமு மன்றியே யொன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமு மன்றியே யகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன்தெரிந்த ஞானியே.

அதன் விளக்கம்:
இந்த பூமியில் இருக்கும் எல்லாவற்றிலும், ஆகாயம் போல் பறந்து விரிந்துள்ள எல்லாவற்றிலும், அங்கொன்றும் இங்கொன்றும் இல்லாமல் எங்குமே நீக்கமற நிறைந்த பரம்பொருளாக இருக்கும் ஜோதி வடிவானவர். இந்த ஜோதி எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் வியாபித்து இருக்கிறது. ஒவ்வொருவரின் மனதிற்கு உள்ளேயும், வெளி உடம்பிலும் மெய்ப்பொருளாக இருக்கக்கூடிய இந்த சக்தியை எவன் ஒருவன் அறிந்து உணர்கிறானோ, அவன் தனக்குள் ஈசனை கண்டு தியானித்து யோகியாக கூடிய தெளிந்த ஞானி ஆவான். இப்பாடலை பொருள் புரிந்து தினமும் காலையில் எழுந்ததும் ஈசனை நினைத்து மனம் உருகி பாடி வந்தால் நமக்குள் புது சக்தி பிறக்கும் என்று சிவவாக்கியர் கூறுகிறார். இப்பாடலை பாடி நமக்குள் ஈசனை கண்டு தான் பார்ப்போம்.

- Advertisement -