- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகம் மற்றும் உடலின் நிறத்தை அதிகரிக்க உதவும் மாஸ்க்.

முகம் மற்றும் உடலின் நிறத்தை அதிகரிக்க உதவும் மாஸ்க்.

- Advertisement -

கலராக வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கும். சிறிய குழந்தைகள் முதல் அனைவருக்கும் இந்த எண்ணம் இருக்கும். மாநிறமாகவோ அல்லது கருமை நிறத்திடனும் இருப்பவர்களுக்கு வெள்ளையாக இருப்பவர்களை பார்க்கும் பொழுது சிறிது பொறாமை கூட ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. எந்த நிறத்தில் இருந்தாலும் அழகு அழகு தான் என்பதை அறிந்து கொள்ளாதவர்கள் தங்களை வெண்மையாகிக் கொள்வதற்காக பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உபயோகப்படுத்துவதற்குரிய ஒரு மாஸ்கை தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

அழகு என்றாலே அது வெண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான கருத்து என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இருப்பினும் சிலருக்கு இந்த வெள்ளை நிறம் என்பதின் மீது பெரிய மோகம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காக அப்படிப்பட்டவர்களுக்கு உதவக்கூடிய பதிவாக இது இருக்கப் போகிறது.

- Advertisement -

முகத்திற்கு மட்டும் நாம் பல வழிகளில் வெள்ளையாக்குவதற்கு முயற்சி செய்கிறோம். முகத்தோடு சேர்த்து உடலுக்கும் இதே பேக்கை நாம் உபயோகப்படுத்தினால் நம்முடைய முகம் மட்டுமல்லாமல் உடலும் வெண்மையாக மாறும் என்பது தான் உண்மை. இப்பொழுது இந்த பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

ஒரு கைப்பிடி அளவு உளுந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் தனித்தனியாக தண்ணீர் ஊற்றி கழுவி காய்ச்சாத பசும்பாலை ஊற்றி 4 இருந்த 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெளியில் வைத்து ஊற வைத்தால் பால் கெட்டுப் போய்விடும் என்பதால் ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். அடுத்ததாக ஒரு உருளைக்கிழங்கை துருவி அதிலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

5 மணி நேரம் கழித்து ஊறவைத்த பாலுடன் உளுந்தை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்றக்கூடாது. இதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதே போல் பச்சரிசியையும் ஊறவைத்த பாலுடன் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இவை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விட வேண்டும். மிதமான தீயில் நன்றாக கிளற வேண்டும். அது கெட்டியாகி கிரீம் போல் வரும்.

நன்றாக கிரீம் ஆக மாறிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது நாம் எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சாறை மேலோட்டமாக இருத்துவிட்டு அடியில் தங்கி இருக்கும் மாவு பொருளை நாம் செய்து வைத்திருக்கும் அந்த கிரீமில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்பொழுது இந்த கிரீமில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஒரு பவுலில் எடுத்து அதனுடன் தயிரை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதே பேக்கை நம்முடைய உடல் முழுவதும் தேய்த்து குளித்தோம் என்றால் முகம் மட்டுமல்லாமல் உடலும் வெண்மையாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் காய்கள்.

இவ்வாறு ஒருமுறை தயார் செய்து வைத்த இந்த மாஸ்கை பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை உபயோகப்படுத்த முடியும். வாரத்திற்கு மூன்று முறை இந்த மாஸ்கை பயன்படுத்தினோம் என்றால் நம்முடைய நிறம் மேன்மை அடைவதை நம்மால் ஒரு வாரத்திலேயே உணர முடியும்.

சற்று முன்