நீங்கள் தலைவைத்து தூங்க வேண்டிய திசை இதுதான்! இந்த திசையில் தலைவைத்து தூங்கினால் கோடீஸ்வரர் ஆகலாம்.

sleeping-direction

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் உங்களில் எத்தனை பேர் எட்டு மணி நேரம் தூங்குகிறீர்கள்? என்று கேட்டால் பாதி பேரிடமிருந்து கூட பதில் வராது. இதனால் உங்களால் எந்த வேலையிலும் முழுமையாக ஆர்வத்துடன் ஈடுபட முடியாது. எப்போதும் டென்ஷன், சோர்வு என்றே இருப்பீர்கள். இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதிலிருந்து பலரும் ஓரளவிற்கு வெளியே வந்திருக்கலாம். ஆனால் இதனை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நீங்கள் எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது? நீங்கள் தூங்கும் திசையும், அதற்குரிய பலன்களும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

sleep

குழந்தைகளுக்கான திசை:
பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும், சிறுவர் சிறுமியர்களும் இந்த திசையில் தலைவைத்து தூங்குவதால் நிறைய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளின் மூளை ஒரு விஷயத்தில் முழு கவனம் செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று. இந்தத் திசையில் குழந்தைகள் தலை வைத்து தூங்கினால் அவர்களின் நினைவாற்றல் பெருகும். மூளை திறன் அதிகரிக்கும்.

இதனால் அவர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஒரு வேலையில் கவனத்துடன் ஈடுபட முடியும். புதிதாக வேலை கற்பவர்கள், கணக்கு வழக்கு பார்ப்பவர்கள், மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது. கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால், தூக்கத்தில் மூளையின் நரம்புகளுக்கு ஓய்வு கிடைக்கும். மறுநாள் அதுவும் நம்முடன் சேர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

verum-tharai-sleep

கிழக்கிற்கு அடுத்தபடியாக அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடிய திசை தெற்கு திசை. தெற்கு திசையில் நீங்கள் தலைவைத்து வடக்குத் திசையை நோக்கியபடி கால்களை நீட்டிக் கொண்டு தூங்கினால் மிக சிறப்பான பலன்களை அடைவீர்கள். இதனால் உங்களுக்கு எந்த செயலிலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்களைத் தேடி புகழும், வெற்றியும், செல்வமும் வந்தடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் நீங்கள் மன இறுக்கத்தில் இருந்து விரைவில் வெளியேறி விடுவீர்கள். எதையாவது மூளையில் போட்டு புலம்பிக்கொண்டே இருப்பவர்களுக்கு தெற்கு திசை தான் தலை வைத்து தூங்குவதற்கு சரியான திசையாக இருக்கும்.

- Advertisement -

அடுத்து மேற்கு திசை. மேற்கு திசையில் தலை வைத்து தூங்குவதும் நல்லது தான். மேற்கு திசையில் தலைவைத்து தூங்கினால், நீங்கள் மிகப்பெரிய செல்வந்தராக ஆவதற்கு வாய்ப்புகள் அமையுமாம். பெயர், புகழ், அந்தஸ்து என்று சுகபோக வாழ்க்கை கிடைக்குமாம். உங்களின் ஜாதகப்படி உங்களுக்கு வர இருக்கும் அதிர்ஷ்டத்தை இழுத்துக் கொண்டு வந்து உங்களிடம் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கும் திசை மேற்கு திசையாம். உங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கு இந்த இந்தத் திசையில் தூங்கினால் நல்லது.

sleep

யாரும் கட்டாயம் தலைவைத்து தூங்கக் கூடாத திசையாக வடக்கு திசை இருக்கிறது. வடக்குத் திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டிக் கொண்டு தூங்குபவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் நிச்சயம் வரும். அவர்களின் ஆரோக்கியம் பெருமளவு பாதிப்படையும். ஆரோக்கியம் மட்டுமல்ல மனதளவில் அவர்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள். எதிலும் நாட்டம் இல்லாமல் விரக்தி மனப்பான்மையுடன் இருப்பார்கள். இதனால் அவர்களிடம் செல்வ வளம் குறையும்.

sleep1

வடக்கு திசையில் தலை வைத்துத் தூங்கக் கூடாது என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இறந்து போனவர்களை வடக்கு திசையில் தலை வைத்து தான் படுக்க வைப்பார்கள். இறந்து போன ஆத்மாக்கள் வடக்கு திசை வழியாக செல்வதாக சாஸ்திர குறிப்புகள் உள்ளன. அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும் என்றால், பூமியின் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் நேர் எதிர் மின்னோட்டம் இருப்பது போல், நம் மனித உடலிலும் தலை மற்றும் கால் பகுதியில் நேரெதிர் மின்னோட்டம் இருக்கும். இதனால் ஒரே துருவத்தில் நாம் படுக்கும் பொழுது அந்த ஆற்றல் பாதிக்கப்படும். இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒரு மனிதன் பாதிப்படைவான்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டில் பணத்தை எங்கே வைக்கிறீர்கள்? இப்படி வைத்து பாருங்கள் பணம் மேலும் மேலும் கொட்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான வாஸ்து சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sleeping direction as per vastu in Tamil. Sleeping direction as per vastu. Best direction to sleep in Tamil. Best direction to sleep vastu. Entha thisaiyil thalai vaithu thoonga vendum.