பெண்கள் கட்டாயம் இப்படி படுத்து தூங்கக் கூடாது! தேவையில்லாத கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

sleep

பொதுவாக பெண்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்ற பல சாஸ்திர முறைகள் உள்ளது. ஆனால், தூங்குவதற்கு கூடவா சாஸ்திரம்? என்று நினைத்துக் கொண்டே இந்த பதிவினை தயவு செய்து படிக்க வேண்டாம். பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டினால் ஏற்படும் பாதிப்பும், அவளோடு முடிந்து போவதில்லை. அந்த குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால் தான் பெண்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள். ஆக, ஒரு பெண்ணாக பட்டவள் இரவு நேரத்தில் எப்படி தூங்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

heart

எப்போதுமே பெண்கள் ஒரு பக்கமாக ஒருக்கழித்து தூங்குவது மிகவும் நல்லது. வானத்தைப் பார்த்தவாறு மல்லாந்து படுக்கக் கூடாது. சிலபேர் மல்லாந்து படுத்து தங்களுடைய இரு கைகளை இறுக்க கட்டிக் கொண்டு தூங்குவார்கள். இப்படி தூங்கினால் பெண்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு பெண் முழுமையாக கவிழ்ந்து படுக்கவே கூடாது. வீட்டிற்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தேடித்தரும் என்று சொல்லப்படுகிறது. சாஸ்திர குறிப்புகளில் பெண்களின் மார்பகங்கள் தரையில் படுவது பாவச் செயலாக சொல்லப்பட்டுள்ளது. மெத்தையில் படுத்து உறங்கினாலும், பாயில் படுத்து உறங்கினாலும், பெண்களின் மார்பகங்கள் தரையைப் பார்த்தவாறு இருக்கக் கூடாது என்பதுதான் இதன் அர்த்தம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து பெண்கள் இந்த தவறை செய்யவே செய்யாதீர்கள். குடும்பத்திற்கு நல்லதல்ல.

sleeping

இதேபோல் உங்களுடைய குழந்தைகளின் படுக்கை விரிப்புகளை, அவர்களையே விரித்துக் கொள்ளும்படி சொல்லக்கூடாது. அதாவது குழந்தைகளின் படுக்கை விரிப்பை அந்த குழந்தைகளின் பெற்றோர் தான் கட்டாயம் விரித்து தரவேண்டும். இதுவும் ஒரு சாஸ்திரம் தான். அப்படி செய்யும் பட்சத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே அவரவர் படுக்கும் படுக்கையை, அவரவரே விரித்துக் கொள்ளாமல், அடுத்தவர் விரித்து தருவது மிகவும் சிறப்பானது.

- Advertisement -

ஆனால் இந்த காலகட்டத்தில் கூட்டுக்குடும்பம் எல்லாம் மிகவும் குறைவாக உள்ளதால் மனைவியும், கணவரும் தங்களுடைய படுக்கையை ஒருவரை ஒருவர் மாறி மாறி விரித்துக் கொள்வது மிகவும் சிறப்பானது.

bed vastu

பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் முடிந்தவரை குப்புற படுத்து தூங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அறிவியல் ரீதியாக குப்புறபடுத்து தூங்கும் போது உடல் ரீதியான பிரச்சனைகள் அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. உடம்பில் இருக்கும் உள் உறுப்புகளுக்கு அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால்கூட, ஆன்மீகத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த விஷயங்களை நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் செய்யும், இப்படிப்பட்ட சின்ன சின்ன தவறுகளுக்கும் பாவக் கணக்கு எழுதப்படும். இப்படிப்பட்ட பாவங்களை நீங்களும் கண்டிப்பா செஞ்சிருப்பீங்க! செய்த பாவத்தை எப்படி குறைப்பது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sleeping tips in Tamil. Tips on how to sleep through the night. How to sleep position. Sleeping positions.