சாஃப்டான சப்பாத்திக்கு வெறும் 10 நிமிஷம் போதுமே! இந்த 4 ட்ரிக்ஸ் தெரிஞ்சுக்கோங்க.

wheat chapathi
- Advertisement -

விதவிதமாக எல்லா வகைகளையும் செய்து வீட்டில் சமையல் குயினாக இருந்தாலும் சிலபேருக்கு சப்பாத்தி செய்வதில் மட்டும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். என்னதான் மெனக்கெட்டு சப்பாத்தி பிசைந்தாலும் சப்பாத்தி சாஃப்டாக வருவதில் பிரச்சனைகள் இருக்கும். சுட சுட சாப்பிடும் பொழுது சாஃப்டாக இருக்கும் சப்பாத்தி ஆறியவுடன் ரஃப் ஆக மாறிவிடும். அதை பிய்த்து சாப்பிடுவதற்கு ஒரு கை போதாது! இரண்டு கை தேவைப்படும்! இவ்வளவு கஷ்டப்பட்டு சப்பாத்தி செய்ய வேண்டிய அவசியமே இனி இல்லை. இந்த நாலு ட்ரிக்ஸ் தெரிந்தால் சப்பாத்தி சுடுவதில் நீங்கள் தான் மாஸ்டர்! அப்படி என்ன ட்ரிக்ஸ் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

wheat

சப்பாத்தி பிசைவதற்கு மாவு தரமானதாக இருக்க வேண்டும். நீங்கள் வீட்டில் அரைத்தாலும் சரி, கடையில் வாங்கும் மாவாக இருந்தாலும் சரி எதுவாயினும் ஒரு முறை சலித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை சப்பாத்திகள் தேவையோ அத்தனை கரண்டி மாவு எடுத்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

- Advertisement -

சப்பாத்தி சாஃப்டாக வருவதற்கு குறிப்பிட்ட இந்த இரண்டு பொருட்களை சேர்த்தால் அட்டகாசமான சுவையில் மெத்தென்ற சப்பாத்தி சுடுவதற்கு சூப்பராக வரும். தேவையான அளவிற்கு மாவில் உப்பை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நெய் அல்லது எண்ணெய் மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரையுடன் எண்ணெய் சேர்த்து மாவு பிசையும் பொழுது சப்பாத்தி சுடும் பொழுது புஸ் என்று வரும்.

sakakrai

நீங்கள் விருப்பப்பட்டால் ஏதாவது ஒரு வாழைப்பழத்தை நன்கு மிக்ஸியில் அடித்து அதை சேர்த்து பிசைந்தால் இன்னும் கூடுதல் சுவையும், எத்தனை நாட்கள் ஆனாலும் மெத்தென்ற சப்பாத்தியும் வரும். சப்பாத்தி பிசைய முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்பு என்றால் அது தண்ணீர் ஊற்றும் பக்குவம் தான்.

- Advertisement -

தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இந்த மாவுடன் சிறிது சிறிதாக ஊற்றிக் கரண்டியால் முதலில் பிசைந்து வர வேண்டும். மாவுடன் சூடான தண்ணீர் சேரும் பொழுது மாவின் கெட்டித் தன்மை இளகி மிருதுவாக இருக்கும். கொழுக்கட்டைக்கு செய்யும் பொழுதும் சூடான தண்ணீரை ஊற்றி இது போல் பிசையும் பொழுது தான் கொழுக்கட்டை மிருதுவாக வரும் அதே போன்ற ஒரு முறை தான் சம்பாதிக்கும் நாம் கையாள வேண்டும்.

wheat

கை பொறுக்கும் சூடு வந்தவுடன் கைகளால் நன்கு மாவை தட்டி தட்டி விட்டு பிசைய வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் போதும் மாவை எடுத்து பாத்திரத்தில் தூக்கி அடித்து நன்கு பக்குவப்படுத்தினால் போதும். கைகளால் அதிக நேரம் பிசைய வேண்டிய அவசியம் கூட இல்லை. வெடிப்புகள் இல்லாமல் எல்லா பக்கமும் சமமாக ஆனவுடன் அதன் மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தடவிக் கொள்ளுங்கள். பின்னர் ஈர துணியை கொண்டு நன்கு மூடி வைத்தால் போதும். அரை மணி நேரத்தில் சப்பாத்தி செய்ய தேவையான சாப்டான மாவு நமக்கு கிடைத்துவிடும். சப்பாத்தியை பொருத்தவரை மாவு தோய்த்து உருண்டைகளை தேய்ப்பது நல்லது. அதுவே பூரி என்றால் மாவு பயன்படுத்தாமல் எண்ணெய் கொண்டு தேய்ப்பது மிகவும் நல்லது. பூரிக்கு அப்படி செய்யும் பொழுது எண்ணெய் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -