கிரைண்டரே தேவை இல்லை! மிக்சியில் கூட பஞ்சு போல குஷ்பூ இட்லி சுலபமாக செய்ய முடியுமா? இது தெரிஞ்சா இனி கடையில மாவே வாங்க மாட்டீங்க.

idli-in-mixie

பெரிய கிரைண்டரில் தான் மாவு அரைக்க, கிரைண்டரை கழுவ சிரமமாக இருக்கும் என்று பார்த்தால் வெட்கிரைண்டரில் கூட மாவு அரைக்க சில பேருக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. ஈஸியாக மிக்ஸியில் பஞ்சு போல இட்லி வந்தால் மாவு அரைக்க கசக்குமா என்ன? ஆனால் மிக்ஸியில் இட்லிக்கு மாவு அரைத்தால் இட்லி கல்லு போல வருவது ஏன்? இந்த முறையில் மிக்ஸியில் மாவு அரைத்து பாருங்கள்! ஹோட்டல் இட்லியே தோற்றுப் போய்விடும். அந்த அளவிற்கு இட்லி மெத்தென்று பஞ்சு போல வரும். அதை எப்படி செய்வது? என இனி இந்த பதிவில் பார்ப்போம்.

rice

மாவு அரைக்க முதலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரிசி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாப்பாடு அரிசி, புழுங்கல் அரிசி, ரேசன் அரிசி அல்லது இட்லி அரிசி எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. அரிசி அளக்கும் அளவையில் மூன்றரை டம்ளர் அளவிற்கு தலை தட்டி அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து நன்கு இரண்டு, மூன்று முறை தண்ணீரில் அலசி பின்னர் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே அளவையில் தலை தட்டி ஒரு டம்ளர் அளவிற்கு முழு உளுந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அளவில் நீங்கள் எடுக்கும் பொழுது மிக்ஸியில் கூட இட்லி மாவு சூப்பராக அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்க கூடுதலாக ஒரு பொருள் தேவை. அதை சேர்க்கும் போது தான் இட்லி பஞ்சு போல மெத்தென்று வரும். வெள்ளை அவல் தான் அது. அவலை அதே அளவில் ஒரு பங்கு அளவிற்கு தலை தட்டி அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

aval-idli3

உங்களிடம் இருக்கும் அவல் நைஸ் அவலாக இருந்தால் அரைக்கும் பொழுது ஊற வைத்தால் போதும். கெட்டியான அவலாக இருந்தால் அரைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஊற வையுங்கள் போதும். சிகப்பு அவல் பயன்படுத்தினால் இட்லியின் நிறம் மாறிவிடும் ஆனால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் சுமார் மூன்று நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை உங்களுக்கு இருக்கும் நேரத்தை பொறுத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பெரிய மிக்ஸி ஜாரில் முதலில் உளுந்தை போட்டு வடைக்கு ஆட்டுவது போல தண்ணீர் விடாமல் சிறிது சிறிதாக நீரை தெளித்து தெளித்து பொங்கி வர ஆட்ட வேண்டும். இறுதியாக ஊற வைத்த அவலை சேர்த்து ஒரு முறை சுற்றி எடுத்து விடவும். பின்னர் அரிசியை போட்டு மிகவும் நைசாக அரைக்காமல் சற்று சொரசொரவென்று அரைக்க வேண்டும். மாவை அதிக நாட்கள் வைத்திருப்பீர்கள் என்றால் அரைக்கும் பொழுது பயன்படுத்தும் தண்ணீரை குளிர்ந்த நீராக பயன்படுத்தவும். இறுதியாக கல் உப்பு சேர்த்து நன்கு சூடு பறக்க கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

idly-maavu

மிக்ஸியில் மோட்டார் சூடாக இருக்கும். எனவே அதில் இந்த மாவை அரைத்த காரணத்தினால் 3 மணி நேரத்தில் இட்லி நன்கு புளித்து விடும். அதன் பின்னர் பிரிட்ஜ்ஜில் வைத்து தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் ஒரு முறை மாவை அரைத்துப் பாருங்கள். இனி கிரைண்டரே தேவையில்லை மிக்ஸியிலேயே பஞ்சு போல சாஃப்டாக இட்லி சுலபமாக சுட்டு விடலாம்.