பஞ்சு போல இட்லி மெத்தென்று வெள்ளை வெளேரென வரலையா? அப்போ இந்த 10 தவறுகள் தான் காரணமாக இருக்கும்.

soft-idli-maavu
- Advertisement -

இட்லி என்றாலே குஷ்பூ இட்லி என்று வர்ணிப்பது உண்டு. பஞ்சு போல புசுபுசுவென பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென்று இருக்கும் இட்லியை தான் அனைவரும் மிகவும் விரும்புகின்றனர். இப்படி இட்லி சுட்டுக் கொடுத்தால் 10 கூட கண்டிப்பாக பத்தவே பத்தாது தானே? ஆனால் ஒரு சிலர் என்னதான் மெனக்கெட்டு முயற்சி செய்தாலும் அவர்கள் செய்யும் இட்லி மட்டும் இது போல் பஞ்சு போல வெள்ளை வெளேரென வருவது இல்லை. பொதுவாக அவர்கள் செய்யும் 10 தவறுகள் என்னவாக இருக்கும்? இட்லி பஞ்சு போல் மெத்தென்று வெள்ளையாக வர என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

making-idly

முதலில் நீங்கள் வாங்கும் இட்லி அரிசி மற்றும் உளுந்து இரண்டும் தரமானதாக இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தரமான இட்லி அரிசியாக, தரமான உளுந்து வாங்கி அரைத்தாலே இட்லி மெத்தென்று வந்துவிடும். அதே போல இட்லிக்கு சோடா மாவு தேவையே கிடையாது. சோடா மாவு சேர்த்து இட்லி மாவு அரைப்பதை கட்டாயம் தவிர்க்கவும். இட்லிக்கு வெந்தயம் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

இட்லிக்கு ஊற வைக்கும் அரிசி மற்றும் உளுந்து அதிகபட்சம் 2 லிருந்து 3 மணி நேரம் மட்டும் ஊறினால் போதும். 2 மணி நேரத்திற்கு குறைவாகவோ, மூன்று மணி நேரத்திற்கு மேலாகவும் ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை. இப்படி ஊற வைத்து அரைத்தால் நிச்சயம் இட்லி மாவு பொங்க பொங்க நன்கு ஆட்டி எடுக்க முடியும். இட்லிக்கு அரைக்கும் அரிசி 4 பங்கு என்றால், உளுந்து 1 பங்கு இருக்க வேண்டும். அரிசியின் அளவு இதில் மிகவும் முக்கியம். மூன்று பங்கிற்கு குறைவாகவும், நான்கு பங்கிற்கு மேலாகவும் அரிசி இருந்தால், இட்லி பஞ்சு போல வருவதில் பிரச்சனைகள் உண்டாகும்.

idly-maavu1

ஊற வைத்த உளுந்தை முதலில் கிரைண்டரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் 5 நிமிடம் அரைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து லேசாக தண்ணீரை கைகளில் எடுத்து தெளிக்க வேண்டும். இது போல் 5 நிமிட இடைவெளி விட்டு விட்டு தண்ணீரைத் தெளித்து தெளித்து பொங்கப் பொங்க ஆட்ட வேண்டும். அப்போது தான் உபரி அதிகமாக நமக்குக் கிடைக்கும். உளுந்து உபரி கொடுக்க கொடுக்க தான் நாம் சுட போகும் இட்லியும் சூப்பராக மெத்தென்று வரும். உளுந்தை 25 முதல் 30 நிமிடம் அரைத்தால் போதும். நன்கு கிரீமியா கொஞ்சம் கூட கட்டிகளில்லாமல் உளுந்து பந்து போல பொங்கி வரும் அதை எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அரிசியை போட்டு அரிசி ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதற்கு இடை இடையே தண்ணீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருபதிலிருந்து இருபத்தைந்து நிமிடம் அப்படியே அரைய விடுங்கள். இடையிடையே கைகளை வைத்து தள்ளி விட்டால் மட்டும் போதும். அரிசி மிகவும் நைசாக அரைத்து விடக்கூடாது. சற்று கொரகொரவென அரிசி இருந்தால் தான் இட்லி மெத்தென்று வரும். பிறகு அரிசியையும் உளுந்தையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். எட்டு மணி நேரம் ஊறிய பிறகு மாவு புளித்து பொங்கி வரும்.

idly 3

பொங்கிய மாவை நன்கு கலந்து இட்லி தட்டில் ஊற்றி 4 நாலு நிமிடத்திலிருந்து 5 நிமிடம் வரை அவித்தால் போதும். அதற்கு மேல் அவிய விட்டால் கூட கல்லு போல வர வாய்ப்புகள் உண்டு. ஐந்து நிமிடத்தில் இட்லி பஞ்சு போல வெந்து வெள்ளை வெளேரென புஸ்ஸென்று இருக்கும். தின்ன தின்ன திகட்டாமல் எத்தனை இட்லிகள் வேண்டுமானாலும் அலுக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்களும் இதே முறையில் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -