வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் சொல்லக்கூடாத வார்த்தை எது தெரியுமா? இந்த வார்த்தையை சொன்னால் வரும் நன்மையும் வராமல் போய்விடுமாம்.

speak-eman
- Advertisement -

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வல்லமை உண்டு என்கிறது சாஸ்திரம். எதை பேசுகிறோமோ, எதை நினைக்கிறோமோ அது தான் நமக்கு நடக்கிறது. நம்மை அறியாமல் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் சில பலிக்கும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே, நாவினால் சுட்ட வடு’ என்று திருவள்ளுவர் அழகாக கூறி சென்றுள்ளார். தீ படும் காயும் எவ்வளவு வலி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதை விட கொடூரமான வலியை உணர வைப்பது தான் அடுத்தவர்களுடைய வார்த்தை.

speak

எனவே பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நாக்கு இருக்கிறது என்பதற்காக கண்டபடி பேசி விடக்கூடாது. அப்படி நீங்கள் உதிர்க்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு எதிராக திரும்பினால் எப்படி இருக்கும்? ஆமாங்க! வீட்டிலும், நீங்கள் தொழில் செய்யும் வருமானம் ஈட்டக்கூடிய எந்த இடத்திலும் நீங்கள் உதிர்க்கும் இந்த வகையான வார்த்தைகள் உங்களுக்கு எதிராக திரும்பும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். அப்படியான வார்த்தைகள் என்ன? நாம் ஏன் அதை பயன்படுத்தக் கூடாது? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

- Advertisement -

முதலாவதாக நாம் எந்த ஒரு மகாலட்சுமி நிறைந்து இருக்கும் பொருளையும் ‘இல்லை’ என்று சொல்லக்கூடாது. மகாலட்சுமி தனத்திலும், தானியத்திலும் நிறைந்து இருக்கிறாள். எனவே தனம் அதாவது பணம், தானியம் அதாவது சமையலறையில் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள். இந்த இரண்டையும் இல்லை என்று சொல்லி பழக கூடாது. பணம் இல்லை! உப்பு இல்லை! அரிசி இல்லை! என்று சொல்லக் கூடாது. பணத்தை வாங்கப் போகிறேன், பணம் வர வேண்டும், உப்பு வாங்க வேண்டும், அரிசி வாங்க போகிறேன் என்று நேர்மறையாக பேச வேண்டும் என்பது நியதி.

sani-baghavan

இதே போல ஒருவர் பேசும் வார்த்தையில் சனியன் என்கிற வார்த்தை இடம் பெறக் கூடாது. குறிப்பாக குடும்பமாக குழந்தைகள் நிறைந்திருக்கும் இல்லத்திலும், பணி செய்யும் இடங்களிலும் சனியன் என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் சனியின் ஆதிக்கம் அங்கு துவங்க ஆரம்பித்துவிடும். பிறகு நடப்பதெல்லாம் எப்படி நன்மையாக அமையும்?

- Advertisement -

‘மூதேவி’ என்கிற வார்த்தையை வீட்டில், தொழில் ஸ்தாபனங்களில் சொல்லவே கூடாத ஒரு முக்கியமான வார்த்தையாகும். மகாலட்சுமிக்கு அக்காவாக இருப்பவள் மூதேவி என்பது சாஸ்திர கூற்று. இருப்பினும் இந்த வார்த்தையை நாம் அடிக்கடி பயன்படுத்தினால் அவள் நம்மிடமே வந்து நிரந்தரமாக ஒட்டிக் கொள்வாள். பிறகு வந்த செல்வம் வந்த வழியே சென்று விடும் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது.

yeman

யமனுடைய மனைவியின் பெயர் தான் ‘ஐய்யோ’. எனவே வீட்டிலும், தொழில் செய்யும் வருமானம் ஈட்டக்கூடிய இடங்களிலும் அடிக்கடி ‘அய்யோ’ என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் விரைவாக தேவையற்ற பிரச்சினைகளும், சிக்கலும் வரப் போகிறது என்பதை குறிக்கிறது. எல்லா நேரங்களிலும், எல்லா சமயங்களிலும் நாம் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை! நீங்கள் உன்னிப்பாக யோசித்துப் பார்த்தால் தெரியும். குறிப்பிட்ட காலத்திற்கு அந்த வார்த்தை நம்மிடம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அதை நம்மால் தடுக்கவே முடியாது. எனவே அந்த சமயங்களில் எல்லாம் சற்று எச்சரிக்கையாக இருந்து இந்த வார்த்தைகளை தவிர்த்து விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் தடைபட்டு போகாமல் நமக்கே கிடைக்கும்.

- Advertisement -