சொந்த வீடு கட்டும் ஆசை விரைவில் நிறைவேற எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்.

god

சொந்த வீடு என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எப்போது இந்த வாடகை வீட்டில் இருந்து வெளியேறி நமக்கென ஒரு சொந்த வீடை கட்டி அதில் நமக்கு பிடித்த மாதிரி வாழப்போகிறோமோ என்று பலரும் புலம்புவதுண்டு. சொந்த வீடோ நிலமோ வாங்குவதற்காகவே மாதா மாதம் சிலர் பணம் சேர்த்து வருவதும் உண்டு. ஆனாலும் எதிர்பாராமல் ஏற்படும் சில சிலவுகளால் அந்த பணம் விரையமாவதுண்டு. சொந்த வீடோ நிலமோ வாங்க நினைப்போர் தங்களது ராசிக்குரிய தெய்வத்தை முறைப்படி வணங்குவதன் மூலம் அதை எளிதில் அடையலாம் என்பது நம்பிக்கை.

house

பொதுவாகவே அனைத்து ராசிக்காரர்களும் முருகப்பெருமானை வணங்குவதன் மூலம் புதிதாக நிலமோ வீடோ வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. பூமிகாரகனான செய்வாக்கு அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான். ஆகையால் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சொந்த வீட்டையோ நிலத்தையோ வாங்குவதற்கான வழி பிறக்கும்.

சொந்த வீட்டை வாங்க பணம் சேர்ப்பவர்கள், முருகன் கோவிலிற்கு சென்று முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, அப்பனே நாங்கள் சொந்த வீடு வாங்க பணம் சேர்க்க துவங்குகிறோம், இந்த முயற்சியானது தடை படாமல் நாங்கள் விரைவாக பணத்தை சேர்த்து சொந்த வீட்டை சீக்கிரம் வாங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு நீங்கள் பணம் சேர்க்க துவங்கலாம். இப்படி செய்வதன் மூலம் அந்த பணமானது அவ்வளவு எளிதில் விரையம் ஆகாது.

Sivanmalai Murugan

அடுத்தபடியாக முருக வழிபாடோடு சேர்த்து, எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால் சொந்த வீட்டை எளிதில் வாங்கலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

மேஷ ராசிக்காரர்கள் அம்பாளை வழிபடுவதன் மூலம் சொந்த வீட்டை அடையலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபடுவது நல்லது.

ரிஷப ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபடுவது நல்லது. திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் உங்கள் சொந்த வீடு கனவு கைகூடும்.

sivaganga

மிதுன ராசிக்காரர்கள் மகாவிஷ்ணுவை வழிபடலாம். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று மனதார பிராத்தனை செய்துகொள்ளுங்கள்.

கடக ராசிக்காரர்கள் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனை வழிபாட்டு வந்தால் சொந்த வீடு வாங்கும் எண்ணம் ஈடேறும்.

சிம்ம ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபடலாம். செவ்வாய் கிழமைகளில் ஆறுமுகப்பெருமானை தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

murugan5

கன்னி ராசிக்காரர்கள் சித்தர் பீடங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் சொந்தமாக வீடு வாங்கும் எண்ணம் கை கூடும். சித்தர் பீடங்களுக்கு செல்ல முடியாதவர்கள் காவல் தெய்வங்களை வணங்கலாம்.

துலா ராசிக்காரர்கள் புதன் கிழமைகளில் விநாயகப்பெருமானை வழிபடலாம். மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதம் இருப்பது நல்லது.

விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபடலாம். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு மேலும் சிறப்பு சேர்க்கும். அதே போல வீட்டின் அருகே இருக்கும் நாய்களுக்கு உங்களால் முடிந்த உணவை இடலாம்.

தனுசு ராசிக்காரர்கள் முருகப் பெருமானை வழிபடலாம். மாதம் தோறும் வரும் கிருத்திகை தினத்தில் வெற்றி வேலணை வழிபாடு செய்வது மேலும் சிறப்பு சேர்க்கும்.

மகர ராசிக்காரர்கள் அம்பாளை வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளை அம்மன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

Amman-deepam-1

கும்ப ராசிக்காரர்கள் தங்கள் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலமே சொந்த வீடு யோகத்தை பெறலாம். கண்டிப்பாக வருடா வருடம் குலதெய்வத்திற்கு தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது.

மீன ராசிக்காரர்கள் புதன் கிழமைகளில் புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்ல பலனை தரும்.