- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்களின் கனவு இல்லம் நினைவாக வேண்டுமா? அதற்கு இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்திடுங்கள்

உங்களின் கனவு இல்லம் நினைவாக வேண்டுமா? அதற்கு இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்திடுங்கள்

- Advertisement -

யாராவது ஒருவரிடம் உனது ஆசை என்னவென்று கேட்டால் பலரின் பதில் தனக்கென்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதுதாக தான் இருக்கும். வாழ்நாள் முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு, உழைத்து தனது இறுதிக் காலத்திலாவது சொந்த வீட்டில் அமர வேண்டும் என்பது தான் பலரின் கனவாக இருக்கும். ஒரு சிலருக்கு சொந்த இடம் இருக்கும் ஆனால் அதில் அவர்கள் எதிர்பார்த்த வகையில் வீடு கட்டுவதென்பது வெறும் கனவாக மட்டுமே இருந்து கொண்டிருக்கும். இப்படி ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் சொந்த வீடு என்பது நிறைவேற இந்த எளிய பரிகாரத்தை வீட்டின் பூஜை அறையில் தவறாமல் கடைபிடித்தல் வேண்டும். வாருங்கள் அவ்வாறு இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

home

இன்றைய காலத்தை களிகாலம் என்று பலரும் சொல்லி வருகின்றார்கள். அவ்வாறு யாராவது ஒருவரை மற்றொருவர் ஏமாற்றுவதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிபட்ட ஏமாற்றும் உலகத்தில் எந்தவித வில்லங்கமும் இல்லாமல், பிரச்சனையும் இல்லாமல் சரியான பத்திரங்களுடன் ஒரு இடத்தை வாங்குவதென்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. பணம் சேர்ப்பது ஒருவகையில் கடினமான விஷயமாக இருந்தாலும் அந்த பணத்தினை யாரிடமும் ஏமாறாமல் சரியான இடத்தை வாங்குவதென்பது அதனை விட கடினமான விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

இவ்வாறு அரும்பாடுபட்டு ஒரு இடத்தை வாங்கி விட்டாலும் அந்த இடத்தில் தனது கனவு இல்லத்தை அமைப்பதென்பது பெரும் போராட்டம் தான். இவ்வாறு நமது கனவுகளும் ஆசைகளும் நிறைவேற கடவுளின் அருளும் நிச்சயம் தேவைப்படுகிறது. அவ்வாறு நிலம், சொத்து, வீடு இது போன்ற தேவைகள் அமைவதற்கு நமது ஜாதகத்தில் செவ்வாயின் பலம் அதிகமாக இருக்க வேண்டும்.

பொதுவாக செவ்வாய் கிரகத்தை பூமிகாரகன் அல்லது ஆங்காரகன் என்று அழைக்கிறோம். அதுமட்டுமல்லாமல் செவ்வாய் கிரகத்தை அசுப கிரகம் என்றும் சொல்கிறோம். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தது என்றால் இவ்வாறான கனவுகளை நிறைவேற்ற முடியாமல் அதற்கு பல தடைகள் வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

எனவே செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுளான முருகரை நாம் மனதார வணங்கிட வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலை அல்லது மாலை வேளையில் பூஜை அறையில் முருகப் பெருமானை நினைத்து 6 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். அதுமட்டுமல்லாமல் முருகப்பெருமானின் தெய்வீக ஸ்தலங்களுக்கு சென்று நமது வேண்டுதலை சொல்லி முருகப்பெருமானை வணங்கி வரவேண்டும். இவ்வாறு முருகப்பெருமானை தொடர்ந்து வணங்கி வருவதால் ஜாதகத்தில் செவ்வாய் பலம் அடைந்து நமது கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.

chevvai

அவ்வாறு வீட்டின் பூஜை அறையில் செய்ய வேண்டிய ஒரு சிறப்பு பரிகாரமும் இருக்கிறது. இடம் வாங்குவதற்காக பணத்தை சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காமாட்சி அம்மன் விளக்கிற்க்கு அடியில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அவ்வாறு இடம் இருக்கிறது அதில் வீடு மட்டும் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை காமாட்சி அம்மன் விளக்கில் ஊற்றப்படும் எண்ணெயினுள் போட வேண்டும்.

kamatchi-vilakku

இவ்வாறு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து பூஜைகள் செய்தபிறகு இந்த நாணயங்களை வாரம் ஒருமுறை பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது அவற்றை ஒரு மஞ்சள் துணியில் பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். உங்கள் கனவு நிறைவேறும் வரை இவ்வாறான பூஜைகளை தொடர்ந்து செய்து வர வேண்டும். உங்கள் கனவு இல்லம் கட்டி முடித்த பிறகு இந்த ஐந்து ரூபாய் நாணயங்களை உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று உண்டியலில் செலுத்த வேண்டும். இவ்வாறான பூஜைகளை முழு மனதுடனும், நம்பிக்கையுடனும் செய்து வர நல்ல பலன் விரைவில் கிடைத்துவிடும்.

சற்று முன்