நிறைய பேருக்கு சொந்தமாக நிலம் இருக்கும். அந்த நிலத்தில் சொந்தமாக வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்று ஆசையும் இருக்கும். கனவுகளும் இருக்கும். நிலத்தில் வீடு கட்ட லோன் அப்ளை செய்திருப்பார்கள். லோன் கிடைத்திருக்காது. கைக்கு வர வேண்டிய பணம் சரியான நேரத்தில் வந்து சேராது. அந்த நிலத்தில் சொந்த வீடு கட்டுவதற்கான யோகமே இவர்களுக்கு அமையாது. எவ்வளவு முயற்சி செய்தும் முயற்சிகளில் இறுதியில் தோல்வி மட்டும் தான் வரும்.
பணத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூட வீடு கட்டும் யோகம் சில பேருக்கு கை கூடி வராது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் இந்த தை மாதத்தில் வாராகி அம்மனை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த தை மாதம் நிச்சயம் கடைக்கால் போடுவீர்கள். அடுத்த தை மாதத்திற்குள் சொந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு சொந்த வீட்டை சீக்கிரம் கட்டித்தரப் போகும் அந்த பரிகாரம் பற்றிய விரிவான ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
சொந்த வீடு கட்ட வாராஹி வழிபாடு
உங்க சொந்த நிலத்திற்கு செல்லுங்கள். அதிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். சீக்கிரம் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனை உங்கள் மனதில் இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் வாராகி அம்மன் சன்னிதானம், எந்த இடத்தில் இருக்கிறது என்று பாருங்கள்.
அந்த வாராஹி அம்மன் பாதத்தில் இந்த மண் முடிச்சை வைத்து, உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து கொண்டு போய் வைத்து, வாராகி அம்மனுக்கு செவ்வரளி பூ அல்லது சிவப்பு நிற செம்பருத்தி பூ ஏதாவது ஒரு பூக்களை வாங்கிச் சென்று, தேங்காய் வெற்றிலை பாக்குப் பழம் வைத்து அர்ச்சனை செய்து, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் எடுத்துச் சென்று அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் கையாலே விநியோகம் செய்யுங்கள். வாராஹி அம்மன் பாதத்தில் வைத்திருக்கும், மண் முடிச்சை திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மண்ணை கொண்டு போய் உங்கள் நிலத்திலேயே மீண்டும் போட்டு விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். பரிகாரத்தில் நீங்கள் செய்யக்கூடிய வேலைகளை விட நம்பிக்கை தான் அதிகமாக இருக்க வேண்டும்.
தை மாதம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி, இப்படி எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்து முடித்த ஒரு சில நாட்களிலேயே சொந்த நிலத்தில் வீடு கட்டக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைத்துவிடும்.
இதையும் படிக்கலாமே: தை வெள்ளிக்கிழமை சமையல் அறை வழிபாடு
எந்தவிதமான தடைகளும் இல்லாமல், தடங்கல்களும் வராமல் நினைத்தபடி சொந்த நிலத்தில் வீடு கட்டி குடியேறுவீர்கள். குடியேறிய வீட்டில் உங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறைக்கு, தலை தூங்கி சந்தோசமாக வாழும். அந்த வேலையை வாராகி பார்த்துக் கொள்வாள். வழிபாட்டை முடித்துவிட்டு உங்களுடைய முயற்சிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள் போதும். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் வாராகியை வேண்டி இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.