வேலைக்கு சென்று குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு ஏற்கனவே சொத்துக்கள் இருப்பினும் தன்னுடைய சுய உழைப்பில் ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்று ஆசைப்படாத நபர்களையே இருக்க மாட்டார்கள். அவரவர்களின் விருப்பப்படி அவர்களுடைய சம்பாத்தியத்தில் அவர்கள் வாங்கக்கூடிய அல்லது கட்டக்கூடிய சொந்த வீட்டின் மகிழ்ச்சி என்பது மற்ற சொத்துக்களால் கிடைக்காது என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட சொந்த வீடு அமைவதில் ஏதேனும் தடைகள் இருக்கும் பட்சத்திலோ, வீட்டை ஆரம்பித்து அதை கட்ட முடியாத நிலையில் இருப்பவர்களோ விரைவில் வீட்டை கட்டி முடித்து அதில் குடியேருவதற்கு செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சொந்த வீடு அமைய தாந்த்ரீக பரிகாரம்
காக்கை குருவிகள் கூட தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி அதில் தான் குடும்பத்தை நடத்துகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் ஆறறிவு படைத்த மனிதர்களான நாமும் நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு சொந்த வீடு என்ற ஒன்றை கண்டிப்பான முறையில் விரும்புவோம். பலருக்கும் இது எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் ஒரு சிலருக்கு இது அவர்களின் வாழ்நாள் லட்சியமாகவும் கனவாகவுமே இருக்கும். இந்த லட்சியத்தை அடைவதற்கும் கனவை நினைவாக்குவதற்கும் பல வழிகளில் முயற்சி செய்தும் அது பலன் தரவில்லை என்னும் பட்சத்தில் நாம் செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த பரிகாரத்தை நாம் கருப்பசாமி இருக்கக்கூடிய கோவிலில் தான் செய்ய வேண்டும். பொதுவாக கருப்பசாமி என்பது ஊர்க்காவல் தெய்வமாக திகழ்கிறது. மேலும் இந்த தெய்வம் உக்கிர தெய்வமாகவும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் தகர்த்தெறிய கூடிய தெய்வமாகவும் திகழ்கிறது. இந்த தெய்வத்தை நாம் முழுமனதோடு வணங்கி வழிபாடு செய்தோம் என்றால் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும். மேலும் நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவே கருப்பசாமி நம் உடனையே என்றென்றும் இருப்பார் .அப்படிப்பட்ட கருப்பசாமி கோவிலில் நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு கருப்பு கொண்டை கடலை வேண்டும். நம்மால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்யலாம். ஒரு கைப்பிடி அளவு கருப்பு கொண்டை கடலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். வருத்த இந்த கொண்டைக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை எடுத்துக்கொண்டு எங்கு கருப்பசாமி கோவில் இருக்கிறதோ அங்கு சென்று கருப்பசாமியை முழுமனதோடு வழிபாடு செய்து சொந்த வீடு அமைய வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்துவிட்டு அவரை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும்பொழுது இந்த கருப்பு கொண்டை கடலை பொடியை கையில் எடுத்து ஓரமாக தூவிக்கொண்டே வரவேண்டும்.
இப்படி தூவுவதன் மூலம் இந்த பொடியை சாப்பிடுவதற்காக எறும்புகள் வரும். அந்த எறும்புகள் இதை தங்களுடைய உணவாக எடுத்துக் கொள்ளும். இப்படி எறும்புக்கு நாம் தானம் செய்வதன் மூலம் பலவிதமான நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக கருப்பசாமி இருக்கக்கூடிய கோவிலில் இருக்கும் எறும்பிற்கு நாம் தானம் செய்வதன் மூலம் நம்முடைய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்குவதோடு நம்முடைய வேண்டுதலும் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: சிறந்த அறிவைப் பெற சிவ வழிபாடு
ஊருக்கே காவல் தெய்வமாக இருக்கக்கூடிய கருப்புசாமியை இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது அவர் நமக்கும் காவல் தெய்வமாக இருந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.