சொந்த வீடு வாங்க முருகனுடைய ‘சரவணபவ’ என்னும் மந்திரம் ஒன்றே போதுமே! விரவில் சொந்த வீடு கட்ட முருகனை வீட்டில் எப்படி முறையாக வழிபடுவது?

murugan-home

ஒருவருக்கு சொந்த வீடு அமைவதற்கு உரிய சரியான சந்தர்ப்பங்கள் அமையும் பொழுது முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் எந்த வித தடையும் இல்லாமல், சொந்த வீடு அமையும் என்பது விதி. முருகப் பெருமானை வணங்குபவர்களுக்கு சொந்த மனை, சொந்த வீடு எளிதாக அமையும். இதற்கு நாம் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் கூட இல்லை வீட்டிலேயே எப்படி முருகப் பெருமானை வழிபட்டு சொந்த வீடு அமைத்துக் கொள்ளலாம்? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

murugan1

முருக வழிபாடு வீட்டில் செய்வது விசேஷமான பலன்களை கொடுக்கும். முருகனை வணங்குபவர்களுக்கு வாழ்வில் தோல்வியும், கெட்டதும் நெருங்குவதில்லை. மனதில் மனோதிடம் அதிகரிக்க முருகப் பெருமான் வழிபாடு தொடர்ந்து செய்து வரலாம். அது போல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க இந்த பரிகாரத்தை செய்யலாம்.

மேலும் வாடகை வீட்டில் இருந்து உங்கள் உழைப்பு முழுவதும் வாடகைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்கிற கவலைப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு முருக வழிபாடு சிறந்த பலனாக இருக்கும். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது சஷ்டி அல்லது செவ்வாய்க்க ிழமையாக இருப்பது மிகவும் நல்லது. சஷ்டி திதியில் முருகனை வணங்கினால் கேட்ட வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

murugan

செவ்வாய்க்கிழமை அல்லது சஷ்டி திதியில் வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறை முழுவதும் சுத்தம் செய்து அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். சிறிய மனையில் சரவண பவ என்னும் மந்திரத்தை கோலம் போட்டுக் கொள்ளுங்கள். உங்களிடம் முருகன் விக்ரகம் இருந்தால் விக்ரஹம் வைத்துக் கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் படம் வைத்து பூஜை செய்யலாம். முருகனுடைய சரவணபவ எந்திரம் கண்டிப்பாக இந்த பரிகாரத்திற்க்கு தேவைப்படும் ஒரு பொருளாகும்.

- Advertisement -

எந்திரத்தில் சரவணபவ என்கிற எழுத்துக்கள் எல்லா திசைகளிலும் அமைக்கப்பட்டு இருக்கும். இது எல்லாவிதமான பூஜைப் பொருட்கள் கிடைக்கும் இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும். இதை செப்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். முருகனுடைய இந்த சரவணபவ மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.

peacock

முருகனையும், முருகனுடைய எந்திரத்தையும் வைத்து பூஜை செய்யும் பொழுது அதற்குரிய பலன்கள் அபரிமிதமானதாக அமையும். மேலும் முருகனின் அருள் பெற முருகனுடைய மயில் தோகையை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். பூஜையறையில் மயில் தோகை இருப்பது நல்லதா? கெட்டதா? என்கிற குழப்பம் பக்தர்களிடையே எப்போதும் உண்டு. முருகனுக்கு வாகனமாக விளங்கும் மயிலின் தோகையை நாம் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ஸ்ரீ யந்திரம்

ஒரு தாம்பூலத் தட்டில் ‘சரவணபவ’ எந்திரத்தை வைத்து அதன் மீது விக்ரகம் இருப்பவர்கள் முருகனுடைய விக்கிரகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் சாதாரண தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பால், பன்னீர், இளநீர் என்று உங்களிடம் இருக்கும் அபிஷேகப் பொருள்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது தேவைப்படும் அனைத்தையும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தலாம். அபிஷேகம் செய்து முடிக்கும் வரை ‘ஓம் சரவணபவ’ என்கிற இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

muruga

பின்னர் இறுதியாக தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து விட்டு முருகனுக்கு மற்றும் எந்திரத்திற்கு சந்தன, குங்குமம் இட்டு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். ஆறு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி, பஞ்சால் திரியிட்டு, தீபம் ஏற்றி முருகப் பெருமானை மனதார வழிபட வேண்டும். பின்னர் காக்கும் கவசமாக விளங்கும் சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வந்தால் சொந்த வீடு அமைவதற்கான யோகம் உண்டாகும். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.