நீங்களும் விரைவாக உங்களுக்கென்று சொந்த வீடு வாங்க இவர்களுக்கு இந்த தானம் செய்யுங்கள்! இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

murugan-home

சொந்த வீடு என்பது எல்லோருக்கும் எளிதாக அமைந்து விடாது. அதற்கென்று ஒரு யோகம் சுய ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். ஜாதகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்கள் பெற அதற்கு காரகத்துவனாக இருக்கும் செவ்வாய் பகவான் வழுபெற்று இருக்க வேண்டும். செவ்வாய் பகவான் உச்சம் பெறும் சமயத்தில் ஜாதகர் சொந்த வீடு யோகம் பெறுகிறார். மேலும் சொந்த வீடு கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள எந்த மாதிரியான பரிகாரங்கள் உண்மையாக பலனளிக்கும்? என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sevvai

பூமி காரகனாக இருக்கும் செவ்வாய் பகவான் தன்னுடைய பலம் இழக்கும் சமயத்தில் நீங்கள் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது தடைகள் ஏற்படும். எனவே வீடு கட்ட நினைப்பவர்கள் அல்லது புதிய மனை வாங்க நினைப்பவர்கள் தங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எப்படி இருக்கிறார்? எப்பொழுது உச்சம் பெறுவார்? என்பதை பார்த்து விட்டு பின்பு ஆரம்பிப்பது நல்லது.

செவ்வாய் பகவான் நன்றாகத் தான் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது போல் வீடு கட்டவும் ஆரம்பித்து விட்டீர்கள் என்றால்! நீங்கள் இந்த பரிகாரங்களை செய்யும் பொழுது நினைத்த நேரத்தில் வீடு கட்டி முடிப்பீர்கள். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்புகளும் தடை இன்றி வரும். பூமி காரகன் செவ்வாய் பகவானுக்கு அதிதேவதை ‘சுப்பிரமணிய சுவாமி’ ஆவார்.

thiruchendur

எனவே கண்டிப்பாக திருச்செந்தூர் முருகப் பெருமானை வணங்கி அங்கு ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து வழிபாடு செய்தால் சொந்த வீடு கட்டும் யோகம் நிச்சயம் உண்டாகும். மேலும் அங்குள்ள கடல் நீரை ஒரு பாட்டிலில் அடைத்து கொண்டு வந்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நீங்கள் வாங்கிய மனையை சுற்றிலும் தெளித்து வந்தால் விரைவில் வீடு கட்டும் யோகம் உண்டாகும். சீக்கிரமாகவே வீடு கட்டி முடிப்பீர்கள்.

சொந்த மனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறுவாபுரியில் அமைந்துள்ள முருகப் பெருமானை செவ்வாய் அன்று சென்று தரிசனம் செய்து விளக்கேற்றி வரலாம். அப்படி செய்யும் பொழுது நீங்களும் புதுமனை வாங்குவதற்கான யோகத்தை பெறுவீர்கள். எப்படியாவது வீடு, மனை வாங்கி சொந்தமாக வீடு கட்டி முடித்து விட வேண்டும் என்ற கனவுடன் காத்துக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலரும் இருக்கிறோம். எவ்வளவு நாள் உழைத்து சம்பாதித்த பணத்தையெல்லாம் வாடகைக்கு என்று வீணாக்கி இருப்போம். அவற்றை மிச்சம் பிடித்து வைத்திருந்தாலே சொந்த வீடு கட்டி இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு விரக்தியில் இருப்பவர்கள் வீடு, வாசல் கூட இல்லாமல் நாடோடியாக வசிப்பவர்களுக்கு இந்த தானத்தை செய்து பாருங்கள்.

sembu-sombu

செம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இவர்களுக்கு தானம் கொடுக்க நிச்சயம் நீங்களும் சொந்த வீடு கட்டி குடியேறுவதற்கான யோகம் உங்களை தேடி வரும் என்கிறது சாஸ்திரம் பரிகாரங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்கள் அதாவது சிவப்பு நிற மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வர வேண்டும். மேலும் பெருமாள் ஆலயங்கள் அமைக்கும் பணியில் இருப்பவர்களிடம் செங்கல்லை வாங்கி அதில் ராம நாமத்தை எழுதி கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் இந்த செங்கல் மூலம் பெருமாள் ஆலயம் எழுப்பப்படும் பொழுது உங்களுக்கு என்று சொந்த வீடு நிச்சயம் அமையும் என்கிறது சாஸ்திரங்கள். எனவே மேற்கூறிய இந்த சக்தி வாய்ந்த நம்பிக்கைக்கு உரிய பரிகாரங்களை செய்து நீங்களும் விரைவில் சொந்த வீடு கட்ட ஆயத்தமாகலாம்.