ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். பெரியவனான பிறகு இப்படி எல்லாம் இருக்க வேண்டும் அப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளிலும் கனவுகளிலும் மிகவும் முக்கியமான ஒன்றாகவும், அனைவரும் ஆசைப்படக்கூடிய ஒன்றாகவும் திகழ்வதுதான் சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்குவது. இந்த சொந்த வீடு கட்டவும் வாங்கவும் நமக்கு பணம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு முருகப்பெருமானின் அருளும் முக்கியம் என்று கூறப்படுகிறது. அப்படி முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சொந்தமாக வீடு நிலம் வாங்க வழிபாடு
நிலத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். ஒருவர் சொந்தமாக நிலம் வாங்குகிறார் அல்லது வீடு வாங்குகிறார் என்னும் பட்சத்தில் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் என்பது சிறப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் முயற்சி செய்யும் பட்சத்தில் அந்த முயற்சி வெற்றியடைந்து வீடு, நிலம் வாங்க முடியும். அப்படி இவர்கள் இருவரின் ஆதிக்கமும் சரியாக இல்லாத பட்சத்தில் எவ்வளவு பணம் இருந்தாலும் அவர்களால் அவர்கள் பெயரில் சொந்தமாக வீடோ, நிலமோ வாங்க முடியாத சூழ்நிலையை உண்டாகும். ஏதாவது ஒரு தடைகளோ தடங்கலோ ஏற்பட்டு அவை தள்ளிக் கொண்டே செல்லும். இவை அனைத்தையும் சரி செய்வதற்கு உதவக்கூடிய ஒரு தானத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த தானத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் இந்த தானத்தை நாம் செய்ய வேண்டும். கற்கண்டு மற்றும் பச்சரிசியை சரிசமமாக எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை எடுத்துக் கொண்டுதான் முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனுக்கு தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து முருகப்பெருமானை மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
பிறகு கோவிலை வலம் வருவோம் அல்லவா? அப்பொழுது கோவிலில் மரங்கள் இருக்கும். அந்த மரங்களை சுற்றி நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த பச்சரிசி பொடியை தூவி விட வேண்டும். அப்பொழுது விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாக வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டு தூவி விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் குறைக்கப்பட்டு சொந்த வீடு வாங்குவதற்குரிய யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை ஞாயிற்றுக்கிழமை அன்று முருக ஆலயத்திற்கு செல்ல இயலாது என்பவர்கள் சிவாலயத்திற்கு சென்று இந்த பொருட்களை பொடி செய்யாமல் அப்படியே அன்னதானத்திற்காக கொடுத்துவிட்டு வந்து விட வேண்டும். இப்படி செய்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது இன்னும் அதிக பலன் கிடைக்கும் என்று கூற வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கெட்ட சக்திகளை விரட்டியடிக்கும் வாராகி தீப வழிபாடு
தங்களுடைய கனவுகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக எந்த அளவிற்கு முயற்சியை மேற்கொள்கிறோமோ அதே அளவிற்கு கடவுளின் மீது நம்பிக்கை வைத்து வழிபாட்டையும் மேற்கொண்டோம் என்றால் விரைவிலேயே அந்த முயற்சிகள் வெற்றி அடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.