நாளை 14/1/2022 தைத்திருநாள் பொங்கல் அன்று பொங்கல் வைக்கும் நேரமும், சூரியனை வணங்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதோ உங்களுக்காக!

sooriyan-pongal
- Advertisement -

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம் 2022ஆம் ஆண்டு நாளை வெள்ளிக்கிழமையில் மகர சங்கராந்தி என்பது மாலை 5.20 மணிக்கு பிறக்க இருக்கிறது. பொதுவாக நள்ளிரவு அல்லது அதிகாலையில் பிறக்கும் இந்த தை மாதம் இவ்வருடம் பின்னோக்கி பிறப்பதால் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. புதிய புதிய வைரஸ்கள் உருவாகும் என்றும், பொருளாதார நெருக்கடியும், பணவீக்கமும் ஏற்படும் என்றும், காய்கறி விலை, உணவுப் பொருட்களின் விலை கடுமையாக ஏற்றம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Lord sooriyan

சூரிய பகவான் 5.20 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இக்காலத்தில் உத்தராயண புண்ணிய காலம் உதயமாகப் போகிறது. உத்தராயண புண்ணிய காலத்தில் அதாவது காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள்ளாக பிதுர் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம் ஆகும். அதற்கு முன்னமே மீன லக்னத்தில், சந்திர ஓரையில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் பொங்கல் வைக்க சிறந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பொங்கல் வைக்கும் பொழுது சூரிய பகவான் மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். மேலும் பொங்கல் பொங்கி வரும் பொழுது நமஸ்கார மந்திரத்தையும், ‘பொங்கலோ பொங்கல்’ என்கிற வாக்கியத்தையும், அத்துடன் சேர்ந்து உச்சரித்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கலாம். மேலும் சூரிய பகவானுக்கு உரிய முக்கிய மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நோய் நொடி இல்லாத வாழ்வு பெறவும், சகல சௌபாக்கியங்கள் உண்டாகவும் இந்த மந்திரங்களை உச்சரித்து பயன்பெறலாம்.

Sooriyan

சூரியன் பகவான் மூல மந்திரம்:
ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய
ஆதித்யாய ஸ்வாஹா!!!

- Advertisement -

சூரிய பகவான் நமஸ்கார மந்திரம்:
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்,
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்,
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த,
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி!!!

surya-namaskar1

சூரிய பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே!
பாச ஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்!!!

- Advertisement -

சூரிய பகவான் மந்திரம்:
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம்!!!

surya-bhagavan

சூரிய பகவான் மந்திரம்:
ஆம் அஸ்வ த்வஜாய வித்மஹே!
பாச ஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!!!

சூரிய பகவான் 108 போற்றி:
1. ஓம் அதிதி புத்ரனே போற்றி!
2. ஓம் அளத்தற்கரியனே போற்றி!
3. ஓம் அறுகுப்பிரியனே போற்றி!
4. ஓம் அருணன் சோதரனே போற்றி!

surya bhagavan

5. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி!
6. ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி!
7. ஓம் ஆண் கிரகமே போற்றி!
8. ஓம் ஆதிவார நாதனே போற்றி!
9. ஓம் ஆய்வின் இலக்கே போற்றி!

10. ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி!
11. ஓம் ஆன்மாவே போற்றி!
12. ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி!
13. ஓம் இருள் நீக்கியே போற்றி!
14. ஓம் இயக்க சக்தியே போற்றி!

surya-viratham

15. ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி!
16. ஓம் உக்கிரனே போற்றி!
17. ஓம் உஷா நாதனே போற்றி!
18. ஓம் உவமைப் பொருளே போற்றி!
19. ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி!

20. ஓம் உத்திரநாதனே போற்றி!
21. ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி!
22. ஓம் என்பானவனே போற்றி!
23. ஓம் எருக்கு சமித்தனே போற்றி!
24. ஓம் எழுபரித் தேரனே போற்றி!

surya-bhagavan1

25. ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி!
26. ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி!
27. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி!
28. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி!
29. ஓம் ஓராழித்தேரனே போற்றி!

30. ஓம் ஓய்விலானே போற்றி!
31. ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி!
32. ஓம் கதிரவனே போற்றி!
33. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி!
34. ஓம் களங்கமிலானே போற்றி!

surya bhagavan 1

35. ஓம் கமலம் விரிப்பவனே போற்றி!
36. ஓம் கர்ணன் தந்தையே போற்றி!
37. ஓம் கனலே போற்றி!
38. ஓம் கண்ணின் காவலே போற்றி!
39. ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி!

40. ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி!
41. ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி!
42. ஓம் காயத்ரி தேவனே போற்றி!
43. ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி!
44. ஓம் காலக் கணக்கே போற்றி!

suryan

45. ஓம் காய்பவனே போற்றி!
46. ஓம் காலை மாலை கனிவோனே போற்றி!
47. ஓம் கிழக்கு நோக்கனே போற்றி!
48. ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி!
49. ஓம் கிரக நாயகனே போற்றி!

50. ஓம் கிருபாகரனே போற்றி!
51. ஓம் குந்திக்கருளியவனே போற்றி!
52. ஓம் குறை தீர்ப்பவனே போற்றி!
53. ஓம் கோதுமைப்பிரியனே போற்றி!
54. ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி!

sun

55. ஓம் ஞாயிறே போற்றி!
56. ஓம் ஞாலக் காவலே போற்றி!
57. ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி!
58. ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி!
59. ஓம் சாட்சித் தேவனே போற்றி!

60. ஓம் சமரிலானே போற்றி!
61. ஓம் சிங்கக் கொடியனே போற்றி!
62. ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி!
63. ஓம் சிரஞ்சீவியே போற்றி!
64. ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி!

sun

65. ஓம் சுயம்பிரகாசனே போற்றி!
66. ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி!
67. ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி!
68. ஓம் செம்மேனியனே போற்றி!
69. ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி!

70. ஓம் செந்நிறக்குடையனே போற்றி!
71. ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி!
72. ஓம் சூலாயுதனே போற்றி!
73. ஓம் சோழர் மூதாதையனே போற்றி!
74. ஓம் சவுர மதத் தலைவனே போற்றி!

men greeting sun

75. ஓம் தனிக்கோயிலுளானே போற்றி!
76. ஓம் தாமிர உலோகனே போற்றி!
77. ஓம் தூயவனே போற்றி!
78. ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி!
79. ஓம் நடுவிருப்போனே போற்றி!

80. ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி!
81. ஓம் நலமே அளிப்பவனே போற்றி!
82. ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி!
83. ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி!
84. ஓம் நாடப்படுபவனே போற்றி!

sunrise

85. ஓம் நீதிதேவனே போற்றி!
86. ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி!
87. ஓம் பகற்காரணனே போற்றி!
88. ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி!
89. ஓம் பரஞ்சோதியே போற்றி!

90. ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி!
91. ஓம் பாலை நிலத்தேவனே போற்றி!
92. ஓம் பிரபாகரனே போற்றி!
93. ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி!
94. ஓம் புத்தியளிப்பவனே போற்றி!

Surya grahanam

95. ஓம் மல நாசகனே போற்றி!
96. ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி!
97. ஓம் மயில் வாகனனே போற்றி!
98. ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி!
99. ஓம் முதல் கிரகமே போற்றி!

100. ஓம் முக்கோணக் கோலனே போற்றி!
101. ஓம் முழுமுதற் பொருளே போற்றி!
102. ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி!
103. ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி!
104. ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி!

pongal 1-compressed

105. ஓம் விடியச் செய்பவனே போற்றி!
106. ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி!
107. ஓம் ஹரீம் பீஜ மந்திரனே போற்றி!
108. ஓம் சூரிய நாராயணனே போற்றி! போற்றி!!!

- Advertisement -