சௌந்தர்ய லஹரி பலன்கள்

amman

பொதுவாக எதிரிகள் இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை. அந்த எதிரிகள் வெளியாட்களாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும், எப்படியாவது சாதனையை எட்டிப் பிடித்து விட வேண்டும் என்று குறிக்கோளை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவோர் ஏராளம். ஆனால் நம் முன்னேற்றப்பாதையில் தடைக்கற்கள் ஏன் ஏற்படுகிறது. நம் முன்னேற்றத்தை தடுக்கும் எதிரிகள் யாராக இருப்பார்கள் என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் இருக்கும். அதை நாம் வெளியில் சென்று தேட வேண்டாம். நம் மனதிற்குள் கேட்டாலே போதும்.

mariyamman

நம் லட்சியத்தை சாதிக்க வேண்டுமென்றால் முதலில் நம் மனதிற்குள் இருக்கும் பொறாமை, பேராசை, சுயநலம், சோம்பேறித்தனம் இந்த எதிரிகளை முதலில் நம் மனதில் இருந்து வெளியே வீசிவிட வேண்டும். இந்த மறைமுக எதிரிகளிடம் இருந்து நாம் வெளி வந்தாலே போதும். நாம் மேற்கொண்ட லட்சியத்தை அடைந்து விடலாம்.

நமக்குள் இருக்கும் எதிரிகளாக இருந்தாலும் சரி. அல்லது வெளியில் இருக்கும் எதிரிகளாக இருந்தாலும் சரி. எதிரிகளை அழிக்க அந்த அம்பிகையை வழிபடுவது தான் சரியான வழி.

Amman

அந்த அம்பாளின் 1000 கண்களில் இருந்து தப்பிக்க முடியாது என்ற எண்ணமானது தவறு செய்பவர்களுக்கு வரவேண்டும். நம் அகத்தில் உள்ள எதிரிகளாக இருந்தாலும், எதிரே நிற்கும் எதிரிகளாக இருந்தாலும், அந்த அம்பாளை மனதார நினைத்து துதித்து வழிபட்டு வரும்போது அந்த எதிரிகல் அழைக்கப்படுகிறார்கள். அந்த அம்பாளின் பாதங்களை சரணடைந்து இந்த ‘சௌந்தர்யலஹரி மந்திரத்தை’ தினமும் 27 முறை முழு நம்பிக்கையுடன் உச்சரித்தாலே போதும். உங்களுக்காக அபிராமி அந்தாதியில் உள்ள பாடல் இதோ..

- Advertisement -

விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித – த்ருசா
மஹா – ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ.

Amman

பிரம்மா, விஷ்ணு, எமதர்மன், குபேரர், இந்திரர் இவர்கள் அனைவருமே  மகா பிரளய காலத்தில் சிவபெருமான் சம்ஹார தாண்டவம் ஆடியபோது இல்லாமல் போய்விட்டனர். ஆனால் சிவனின் ஆக்ரோஷமான தாண்டவத்தை எதிர்கொண்டு தேவையான நீ மட்டும் புன்னகையுடன் காட்சி அளித்தாய். எவ்வளவு பெரிய பிரளய காலமாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் சக்தியானது அந்த அம்பாளுக்கு உள்ளது. இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் நம் அக, புற எதிரிகள் எல்லாவற்றையும் கடந்து சென்று முன்னேற்றப் பாதையை அடையலாம்.

இதையும் படிக்கலாமே
ஆயுள் விருத்தி தரும் ஜலகண்டேஸ்வரர் கோவில்

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Soundarya lahari slokas in Tamil. Soundarya lahari slogam in Tamil. Soundarya lahari mantra in Tamil. Soundarya lahari mathiram in Tamil.