லாட்டரி சீட்டுகளை ட்விட்டரில் விற்ற தெ.ஆ கிரிக்கெட் நிர்வாகம். காரணத்தினை வெளியிட்ட – ஐ.சி.சி

icc

இன்று காலை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சொந்தமான அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிட்காயின் லாட்டரி சீட்டு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அதனை வாங்கிக்கொள்ளும்படி செய்திகள் வெளியாகின. இதனை கண்ட இணைய வாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

sa 1

மேலும், பிட்காயின் என்பது பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒரு ஆன்லைன் வர்த்தக முறையாகும். இதனை எதற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் விளம்பர படுத்துகிறது. என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி- யம் குழம்பியது.

இதன் காரணம் தற்போது ஐ.சி.சி-யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில், தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தின் ட்விட்டர் பக்கம் சிலரால் ஹாக் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களே இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் நிவாகிகள் மூலம் இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் மேலும், அடுத்த அறிவிப்பு எங்களிடம் இருந்து வரும் வரை அந்த பக்கத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்றும் ஐ.சி.சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.