அட்டகாசமான நிறத்தில் சௌசௌ பொரியல் இயற்கை மணம் மாறாமல் பத்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள்! கணக்கு பார்க்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்.

chowchow-poriyal
- Advertisement -

சௌசௌ பொரியல் செய்வது இவ்வளவு சுலபமா? என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ரொம்பவே சுலபமான மற்றும் ஆரோக்கியமான இந்த பொரியலை நீங்களும் ஒருமுறை இதை அளவுகளில் முயற்சி செய்து பாருங்கள். நீர் சத்துள்ள காய் வகையாக இருக்கும் இந்த சௌசௌ அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணம் தணியும். எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும் இந்த சௌசௌவை பொரியல் எப்படி எளிதாக செய்வது? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

chow-chow

சௌசௌ பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வெங்காயம் – கால் கப், பூண்டு பற்கள் – 2, உப்பு – தேவையான அளவிற்கு, சவ்சவ் – அரை கிலோ, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

சௌசௌ பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் சௌசௌ அரை கிலோ அளவிற்கு எடுத்து அதன் மேல் தோலை நன்கு சீவி விட்டு பின்னர் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி சதைப் பற்றுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள்.

chow-chow-poriyal1

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். கால் கப் அளவிற்கு பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக சேர்த்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

- Advertisement -

வெங்காயம் நன்கு வதங்கி வரும் பொழுது ரெண்டு பெரிய பல் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். பின்னர் நீங்கள் வெட்டி வைத்துள்ள சௌசௌ துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். சௌசௌ நீர் சத்துள்ள காய் என்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்பட்டால் அரை கப் அளவிற்கு தண்ணீரை தெளித்து கொள்ளுங்கள் போதும். இப்போது அடுப்பை ஒரு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.

5 நிமிடம் இடையிடையே கிண்டி விட்டு கொண்டே வாருங்கள். தண்ணீர் முழுவதும் உரிந்த பின்பு சௌசௌ வெந்து வந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதினை சௌசௌ உடன் சேர்த்து நன்கு கலந்து விட்டால் போதும், சுடச்சுட சாம்பார் சாதம், காரக்குழம்பு போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள ஆரோக்கியம் மிகுந்த சௌசௌ பொரியல் தயார் ஆகிவிட்டிருக்கும். மல்லி தழை தூவி பரிமாறுங்கள். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -