மீல்மேக்கரை வைத்து இந்த மொறு மொறு ஸ்னாக்ஸ் செய்ய வெறும் 10 நிமிடம் போதும். பக்கோடா செய்வதைவிட இந்த ரெசிபி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி.

soya-65
- Advertisement -

பொதுவாகவே நிறைய பேர் வீடுகளில் மீல்மேக்கரை எந்த உணவில் சேர்த்து சமைத்து கொடுத்தாலும், அதை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக மீல்மேக்கரை வைத்து பிரியாணி குருமா போன்ற சாதாரணமாக இருக்கக்கூடிய ரெசிபிகளை தான் நம் வீட்டில் முயற்சி செய்து பார்ப்போம். ஆனால் இன்று கொஞ்சம் வித்தியாசமான முறையில் மீல்மேக்கரை வைத்து ஒரு புது ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனால் பகோடா சுடுவதை விட மிக மிக சுலபமாக இந்த ஸ்நேக் செஞ்சிடலாம். சரி ரெசிபிக்கு போவோம் வாருங்கள்.

meal-maker

இந்த ஸ்நேக் செய்ய மீடியம் சைஸ் மீல்மேக்கர் தேவை. 200 கிராம் அளவு மீல்மேக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் இந்த மீல்மேக்கரை சேர்த்து, 3 நிமிடங்கள் தண்ணீரோடு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். மீல்மேக்கர் நன்றாக சுடுதண்ணீரில் ஊறட்டும். தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு உங்கள் கைகளைக் கொண்டு மீன்மேக்கரில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக பிழிந்து விடுங்கள். மீல்மேக்கரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஊற வைத்து தண்ணீர் பிழிந்த இந்த மீல்மேக்கரை ஒரு அகலமான பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது இந்த மீல் மேக்கரில் புளிக்காத கெட்டி தயிர் – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். (கொத்தமல்லிதழைக்கு பதிலாக உங்களுடைய வீட்டில் கஸ்தூரி மேத்தி இருந்தால் அதை நன்றாக நுனுக்கி விட்டு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ளலாம். சுவை இன்னும் கூடும்).

soya-652

இந்த மசாலா பொருட்கள் அனைத்தும் மீல் மேக்கரில் நன்றாக ஒட்ட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு இதில் ஈரப்பதம் குறைவாக இருந்தால் தண்ணீர் ஊற்ற வேண்டாம். கெட்டித் தயிரை கொஞ்சமாக சேர்த்து மீண்டும் பிசைந்து அப்படியே மூடி போட்டு 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அந்த மசாலா, மீல் மேக்கரில் நன்றாக ஊறியிருக்கும்.

- Advertisement -

30 நிமிடங்கள் கழித்து மசாலா ஊறிய இந்த மீல்மேக்கர் உடன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், கடலை மாவு – 1 ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இப்போது இந்த ஸ்னாக்ஸ் செய்ய மீல்மேக்கர் ரெடியாக உள்ளது. அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள்.

soya-653

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, ஒவ்வொரு மீல்மேக்கரை எடுத்து கடாயில் போட்டு பக்குவமாக, கரண்டியை கொண்டு திருப்பிவிட்டு, மீல்மேக்கர் பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து எண்ணெயில் இருந்து வடித்து தனியாக ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக அதே எண்ணெயை சிம்மில் வைத்துவிட்டு, கொஞ்சம் பெரியதாக நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலைகளை எண்ணெயில் பொரித்து இதன் மேலே தூவி பரிமாறினால் சுட சுட Soya Nuggest தயார்.

- Advertisement -