- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் தொட்டு சாப்பிட இப்படி அட்டகாசமான மீல் மேக்கர்...

தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் தொட்டு சாப்பிட இப்படி அட்டகாசமான மீல் மேக்கர் கிரேவி செய்து கொடுங்கள். மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்

- Advertisement -

என்னதான் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையான குழம்பு செய்து கொடுத்தாலும், இவற்றுடன் ஏதேனும் ஒரு சைடிஷ் இருந்தால் மட்டுமே சாப்பாடு முழுமையாக வயிற்றுக்குள் இறங்கும். அப்படி சைடிஷ் இல்லாமல் சாப்பிடுவதென்பது ஒரு சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறிகளை வைத்து பொரியல் செய்வது அனைவரின் வீட்டிலும் வழக்கமாக நடக்கின்ற ஒரு விஷயம்தான். சில சமயங்களில் காய்கறி இல்லாத நேரத்தில் அப்பளம், ஊறுகாய் இது போன்றவற்றையும் தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம். சில உணவுகளுடன் சாப்பிட்ட ஒரு சில சைடிஷ்ள் மட்டுமே ஏற்ற வகையில் இருக்கும். அவ்வாறு தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட இந்த மீல்மேக்கரில் சுவையான வறுவல் செய்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 150 கிராம், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், சீரகத்தூள் – அரை ஸ்பூன், மட்டன் மசாலா – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், பிரியாணி இலை – ஒன்று, பட்டை சிறிய துண்டு – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இந்த சுடு தண்ணீரில் மீல்மேக்கரை சேர்த்து, 5 நிமிடத்திற்கு நன்றாக ஊறவைத்து, அதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி மீல்மேக்கரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இது தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா மற்றும் இரண்டு ஸ்பூன் மட்டன் மசாலா சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இப்பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் கிளறி விட வேண்டும்.

பின்னர் ஊற வைத்து எடுத்து வைத்துள்ள மீல்மேக்கரை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இவற்றுடன் அரை டம்ளர் தண்ணீரை தெளித்து விட்டு, அனைத்தையும் கலந்துவிட வேண்டும். பிறகு இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி கலந்துவிட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் கிரேவி தயாராகிவிடும்.

சற்று முன்