கறிக்குழம்பையே மிஞ்சும் சுவையில் ‘சோயா உருண்டை கைமா குழம்பு’ செய்வது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே!

soya-keema1
- Advertisement -

விதவிதமான குழம்பு வகைகள் செய்தாலும் தினமும் என்ன செய்வது? என்று ஒரு சமயத்தில் யோசிக்க தான் செய்வோம். அந்த சமயத்தில் புதிது புதிதாக எதையாவது செய்ய முனையும் பொழுது, இது போல வித்தியாசமான குழம்பு வகைகளை செய்து அசத்தலாம். கடலைப் பருப்பைக் கொண்டு உருண்டை குழம்பு செய்வது போல, சோயாவை உருண்டை பிடித்து செய்யும் இந்த குழம்பு, கறி குழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும். இதை ‘சோயா கைமா குழம்பு’ என்று கூறுவார்கள். அதை எப்படி நம் கைகளால் சுலபமான முறையில் வைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

soya-maker

‘சோயா கைமா குழம்பு’ செய்ய தேவையான பொருட்கள்:
சோயா உருண்டைகள் – 20, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை பட்டாணி – 1/4 கப், சோம்பு – 1/4 டீஸ்பூன், பட்டை -1 துண்டு, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு. அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியாத் தூள் – ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 6, பூண்டு – 6 பல்.

- Advertisement -

‘சோயா கைமா குழம்பு’ செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சோயா உருண்டைகளைப் போட்டு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு சாதாரணமான தண்ணீரில் இரண்டு முறை சோயா உருண்டைகளை நன்கு அலசிக் கொண்டு தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் இறுக்கமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை பொடியாக நறுக்கி உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

soya-maker1

சோயா உருண்டைகளை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பட்டை மற்றும் சோம்பு ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ளுங்கள். பின்னர் பொடிப் பொடியாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் சிறிதளவு வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள சோயாவை போட்டு வதக்குங்கள். பின்னர் மேலே அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, அதன் பிறகு பொடி பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்குங்கள். பச்சை பட்டாணி விருப்பப்பட்டவர்கள் சேர்க்கலாம்! இல்லையென்றால் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

soya-keema

இப்போது பட்டாணி சேர்த்து வதக்கிய பின்பு, தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். எண்ணெய் தெளிய குழம்பு கொதித்ததும் நறுக்கிய மல்லி தழை, நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை தூவி இறக்கி விடலாம். இந்த குழம்பு சாதத்துடன் மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -