கடவுளிடம் பேச வேண்டுமானால் இதை செய்யுங்கள்

god-brain

மனிதன் தோன்றிய காலம் முதல் இக்காலம் வரை அவன் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் ஒரு மகா சக்தியை இறைவன் அல்லது கடவுள் என்ற பெயரால் அழைத்து வணங்குவது வழக்கமாக இருக்கிறது. இதில் பலருக்கும் அத்தகைய மகா சக்தியான கடவுளுடன் சாமானிய நிலையில் இருக்கும் மனிதர்களாகிய நாம் தொடர்பு கொள்ள முடியுமா என்கிற ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. கடவுளுடன் யார் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்பதே சித்தர்கள், ஞானிகளின் கருத்தாக உள்ளது. அதைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.

சிறு குழந்தைகள் இரண்டு தீப்பெட்டிகளை, ஒரு நூல் கொண்டு இணைத்து அதன் மூலம் இருவரும் சற்று தொலைவாக நின்ற படி ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை நாம் அனுபவப்பூர்வமாக கண்டிருப்போம் அல்லது நாமே சிறுவயதில் இத்தகைய அறிவியல் ரீதியான விளையாட்டில் ஈடுபட்டு இருப்போம்.

இந்த இரண்டு தீப்பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் நூல் மீடியம் எனப்படும் ஊடுபொருளாக செயல்பட்டு இரண்டு புறமும் இருக்கும் நபர்களில் ஒருவர் பேசுவதையும், மற்றொருவர் அதை காது கொடுத்து கேட்பதையும் சாத்தியமாக்கியது. இதைப் போன்றே மனிதர்களின் ஆழ்நிலை மன ஒருமைப்பாடு எனும் நூலை தொடர்பு கொள்ளும் கருவியாக பயன்படுத்தி, பரமாத்மா எனப்படும் பிரபஞ்ச சக்தி அல்லது கடவுள் சக்தியோடு ஜீவாத்மா எனப்படும் மனிதர்களாகிய நாம் தொடர்பு கொள்ள முடியும் என்பது யோகிகளின் கருத்தாகும்.

meditation

இந்த ஆழ்நிலை மனம் என்பது உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்குமே உண்டு. நம்மில் அனைவருமே ஒரு விடயும் நடைபெறுவதற்கு முன்பு, அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு சரியாக யூகித்திருப்போம். பல சமயங்களில் நாம் யூகித்தபடியே அந்த விடயம் நடைபெற்றிருக்கும். இத்தகைய அனுபவம் நமக்கு ஏற்படுவதற்கு காரணம், நம்மில் இருக்கும் ஆழ்மன சக்தியின் அற்புதமான வெளிப்பாடாகும். இந்த ஆழமான சக்தியை தான் இறை சக்தி எனவும் கூறுகின்றனர். இந்த ஆழ்மனமே ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை, தீமைகளை பிரித்து அறியும் பகுத்தறிவை தருகின்றது.

- Advertisement -

brainwaves moolai

ஆழ்மன சக்தி வலிமை பெறவும், அதன் மூலம் நம் வாழ்வில் சிறப்பான பலன்களை பெறவும், எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகளை அந்த ஆழ்மனதிற்குள் விதைக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் ஒரு வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வுக்கு செல்லப் போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் உங்கள் மனதில் “நான் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவேன்” என்று எண்ணுவதை விட, “நான் அந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று விட்டேன்”, “எனக்கு வேலை கிடைத்து விட்டது” என்று தீர்க்கமான நேர்மறை எண்ணங்களால் ஆழ்மனதை நிரப்பி, தொடர்ந்து அந்த எண்ணங்களையே மன ஓட்டத்தில் இருக்குமாறு செய்ய வேண்டும். இதையே ஒரு தியானமாக ஆழ்மனதில் செய்யும்போது அது உங்கள் மனதில் ஒரு சக்திவாய்ந்த நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்குகிறது.

mind-power

நம் மனதில் உருவாகும் இத்தகைய அற்புதமான நேர்மறை அதிர்வலைகள் பிரபஞ்ச சக்தியுடன் கலந்து விடுகிறது. அந்த பிரபஞ்ச சக்தி அல்லது இறை சக்தியானது நாம் மனதில் எதை விரும்புகிறோமோ, அது நமக்கு கிடைப்பதற்கு நம் கண்களுக்கு தெரியாத வகையில் செயல்புரிகிறது. நமது குறிக்கோளை அடைய நாம் அறியாமலேயே, நம்மை வழி நடத்துகிறது. மேற்கண்ட ஆழ்நிலை மன ஒருமைப்பாட்டு பயிற்சியின் மூலம் உங்களின் வேறு எத்தகைய நல்ல விருப்பங்கள் நிறைவேறவும் முயற்சிக்கலாம்.

praying hand

இந்த ஆழ்மான ஒருமைப்பாடு பயிற்சி செய்வதற்கு எந்த ஒரு இடமும் சிறந்தது. கோயில்கள் அனைத்துமே நேர்மறையான அதிர்வுகள் நிறைந்திருக்கும் இடங்களாக இருக்கிறது. எனவே இந்த மன பயிற்சியை கோயிலில் செய்தால் பலன் வேகமாக கிடைக்கிறது. நமது ஆன்மிகப் பெரியவர்கள் கண்டுபிடித்த நாமசங்கீர்த்தனம்,யோகம், தியானம் போன்ற அத்தனை முறைகளுமே நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் ஒரு நேர்மறையான அதிர்வலைகளை உருவாக்கி அதன் மூலம் இறைவனை தொடர்பு கொண்டு, அந்த இறைவனின் அருள் நம்மில் நிறைந்து, நமக்கும் இன்ன பிற உயிர்களுக்கும் நன்மை செய்வதற்காக தான் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
காலையில் கண்விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Speak to god in Tamil. It is also called as Aalmana sakthi in Tamil or Prabanja sakthi in Tamil or Thiyana muraigal in Tamil or Iraivanai adaiyum valigal in Tamil.