குடைமிளகாய் சாதத்துடன் தொட்டுக் கொள்ள இந்த சுவையான கருணைக்கிழங்கு வறுவலையும் செய்து பாருங்கள். செய்து வைத்துள்ள சாதத்தில் ஒரு பருக்கை கூட மிஞ்சாது

variety-rice
- Advertisement -

வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிட இந்த குடைமிளகாய் சாதத்தை செய்து கொடுக்கலாம். ஒவ்வொரு நாளும் குழம்பு, ரசம், சாம்பார் என சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமாக இந்த சாதத்தை செய்து கொடுத்தால் அனைவரும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். அதிலும் உடம்பிற்கு ஆரோக்கியம் கொடுக்கக் கூடிய காய்கறி வைத்து செய்யக்கூடிய இந்த உணவு அனைவருக்கும் மிகவும் பிடித்ததாகவே இருக்கும். இந்த சாதத்துடன் தொட்டுக் கொள்ள காரசாரமாக கருணைக்கிழங்கு வறுவல் சேர்த்து செய்து பாருங்கள். குறைவாக சாப்பிடுபவர்கள் கூட அன்று தட்டு நிறைய சாப்பிடுவார்கள். வாருங்கள் இவற்றை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

kudaimilagai

தேவையான பொருட்கள்:
குடை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, பட்டை சிறிய துண்டு – 1, லவங்கம் – 2, ஏலக்காய் – 1, பிரியாணி இலை – 2, கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து= கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் குடைமிளகாய் 2 வெங்காயம் மற்றும் ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 3 பச்சை மிளகாய் மற்றும் ஒரு தக்காளியை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் லவங்கம், பட்டை, கடுகு, சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

onion

பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி சாற்றையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து இறுதியாக கொத்தமல்லி தலை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் போதும் சுவையான குடைமிளகாய் சாதம் தயாராகிவிடும்.

- Advertisement -

கருணைக்கிழங்கு வறுவல் செய்முறை:
முதலில் கால் கிலோ கருணைக் கிழங்கை தோல் சீவி நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இவற்றை ஒரு கடாயில் சேர்த்து தண்ணீர் விட்டு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கருணைக் கிழங்குகளை எண்ணெயில் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

rice7

பின்னர் ஒரு வெங்காயம் மற்றும் 7 பல் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்றவைத்து கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு வறுத்து வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து கலந்து விடவேண்டும். சிறிது நேரம் இவை எண்ணெயில் வதங்கியதும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -