சத்தான முளைகட்டிய பச்சைப் பயறு தோசை சுலபமாக செய்வது எப்படி? இது தெரிஞ்சா இனி இட்லி, தோசைக்கு உளுந்தை ஊற வைக்க மாட்டீங்க!

sprouted-moong-dal-dosa
- Advertisement -

சாதாரண பச்சைப் பயறில் இருக்கும் சத்துக்களை விட முளைகட்டிய பச்சைப் பயறில் 100 மடங்கு சத்துக்கள் அதிகம். இதில் தோசை வார்த்து சாப்பிடும் பொழுது அதன் சுவையும் அபாரமாக இருக்கும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த முளைகட்டிய பச்சைப் பயறை வைத்து எப்படி சூப்பரான சுவையில் எளிதாக தோசை சுடுவது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

பச்சைப்பயிறு – ஒரு டம்ளர், பச்சரிசி – ஒரு டம்ளர், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – இரண்டு, இஞ்சி – ஒரு இன்ச், சீரகம் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

பச்சைப்பயிறு தோசை செய்வதற்கு முதலில் பச்சைப் பயறை வாங்கி முளைகட்ட விட வேண்டும். இதற்கு ஒரு டம்ளர் அளவிற்கு பச்சைப் பயறை எடுத்து நன்கு நாலைந்து முறை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் அந்த தண்ணீரை எல்லாம் வடிகட்டி விட்டு ஈரப்பதத்தோடு அப்படியே ஒரு மெல்லிய காட்டன் துணியில் கட்டி மூட்டையாக வைக்க வேண்டும். அதன் பிறகு மறுநாள் பிரித்து பார்த்தால் எல்லா பயறும் சூப்பராக முளை கட்டி இருக்கும். வெறும் பச்சை பயறை விட முளைகட்டிய பச்சைப் பயறில் சத்துக்கள் ஏராளம் நிறைந்து காணப்படுகின்றன.

- Advertisement -

இப்பொழுது பச்சரிசி ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த அரிசியுடன் அந்த தண்ணீரையும் மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் முளைகட்டிய பச்சைப் பயறை இதனுடன் சேர்க்க வேண்டும். ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சி தோல் நீக்கி சீவி சேருங்கள்.

பிறகு காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம், ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தழைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் பத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்து மிக்ஸியை இயக்கி நைசாக மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

- Advertisement -

பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து காய விடுங்கள். கல் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்துக் கொண்டு இரண்டு கரண்டி மாவை ஊற்றி அடை போல கெட்டியாக மாவை பரப்பி தோசை சுட வேண்டும். இரண்டு புறமும் நன்கு சிவக்க வெந்து வர எண்ணெய் கொஞ்சம் போல ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: காரசாரமான காரச் சட்னி செய்வதற்கு வெங்காயம் கூட தேவையில்லை! இப்படி ஒரு சட்னி செய்து கொடுத்தால் 10 இட்லி கூட பத்தாம போயிடுமே!

அவ்வளவுதாங்க, ரொம்ப சுவையான மற்றும் ஆரோக்கியம் மிகுந்த இந்த முளைகட்டிய பச்சை பயறு தோசை செய்வதற்கு இவ்வளவு ஈஸி என்றால் இனி நாம ஏன் இட்லி, தோசைக்கு உளுந்து ஊற வைக்க போறோம். இப்படியே அடிக்கடி செஞ்சு சாப்பிட்டா ஆரோக்கியமும் நன்றாக இருக்குமே!

- Advertisement -