தானாக உருவான ஏழுமலையானின் சிலை. திருப்பதி மலை பாதையில் அரங்கேறிய மர்மம்

thirupadhi-ezhumalayaan-mountain-statue-1

உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதியை பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். அத்தகைய புகழ் பெற்ற அந்த திருப்பதி மலையில், ஏழுமலையானின் சிலை ஒன்று தானாக உருவாகி உள்ளது. வாருங்கள் அந்த சிலையை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை விரிவாக பார்ப்போம்.

tirupadhi

திருப்பதியில் உள்ள 2-வது மலைபாதையின் கடைசி வளைவில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தான், தானாக உருவாகிய இந்த அபூர்வ சிலை உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு பக்தர்களின் பார்வையில் பட்ட இந்த சிலை அப்படியே ஏழுமலையானை போல் தோற்றமளிக்கிறது.

தலையில் கிரீடம், கண்கள், மூக்கு, வாய், கழுத்து என அனைத்தும் இந்த சிலையில் உள்ளது. பார்ப்பதற்கு, ஒரு சிறிய மலை தன்னை தானே ஏழுமலையானை போல் உருமாற்றிக்கொண்டதாக தோற்றமளிக்கிறது இந்த சிலை.

இந்த சிலை இருக்கும் இடத்திற்கு செல்ல எந்த பாதையும் கிடையாது. 2-வது மலைப்பாதையின் கடைசி வளைவில் நின்று பார்த்தால் இந்த சிலை நன்றாக தெரியும். விசேஷேச நாட்களில் இந்த சிலைக்கு பூஜை செய்வதற்காக கயிற்றில் தொங்கியபடியாதே சில இளைஞ்சர்கள் அந்த சிலை அருகில் சென்று அதற்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்துவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
கணவன் மனைவி பிரச்சனைக்கு முக்கிய காரணமான பித்ருதோஷத்திற்கான பரிகாரங்கள்.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் பஞ்சாங்க குறிப்புகளை பெற எங்களோடு இணைந்திருங்கள்.