யார் வீட்டிலும் இந்தப் பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை. லட்சுமி கடாட்சத்தை நம் வீட்டில் நிரந்தரமாக குடி வைக்கக் கூடிய சக்தி இந்த பொருளுக்கு மட்டுமே உண்டு.

mahalakshmi

லட்சுமி கடாட்சம் என்பது கோடிகோடியாக பணம் காசை சேர்த்து வைப்பது மட்டும் அல்ல. 16 வகையான செல்வங்களை பெற்று, நிறைவான ஒரு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ, அவர்களே லட்சுமிகடாட்சம் கொண்டவர்கள் என்று அர்த்தம். சுபீட்சம் நிறைந்த, லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி இருக்க வேண்டும். குழந்தை செல்வம் பெற்று, நோய் நொடி இல்லாத வாழ்க்கையை பெற்று, சந்தோஷமான உறவினர்களை பெற்று, அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகள் நல்ல கல்வியை பெற்று, வறுமையே இல்லாமல், மன நிம்மதியோடு வாழ்ந்தால் தானே அது சுபீட்சம் நிறைந்த வீடாக இருக்க முடியும். சுபிட்சம் நிறைந்த வீட்டில் தானே மகாலட்சுமி குடி கொள்வாள்.

selvangal

சரிதான், இதெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனால், அந்த லட்சுமி கடாட்சத்தை சுபிட்சத்தை நிலைநிறுத்த வைக்கக்கூடிய அந்த ஒரு பொருள் என்ன? என்று எல்லோர் மனதிலும் கேள்வி எழுவது புரிகிறது. நெல்மணிகள் தான் அந்த பொருள். அந்த காலத்தில் நெல் கதிர்களை கொண்டு வந்து அவரவர் வீட்டில் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்போது எல்லோருக்கும் நெல் கதிர்கள் சுலபமாக கிடைக்காது. கிராமங்களில் இருப்பவர்களுக்கு வேண்டுமென்றால் கிடைக்கலாம்.

நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் என்ன செய்வது. கொஞ்சமாக பச்சரிசி நெல்லை கடைகளிலிருந்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக மளிகைக் கடைகளில் இந்த பச்சரிசி நெல் விற்பனை செய்யப்படுகின்றது. அதை வாங்கிக்கொண்டு நம்முடைய வீட்டில் இந்த முறைப்படி வைக்க வேண்டும்.

nel-kathir

அளப்பதற்காக பயன்படுத்தும் ஆழாக்கு, படி, அரை படி இப்படி உங்களுடைய வீட்டில் எது இருந்தாலும் சரி, அந்த அளக்கின்ற படியில் நிறைவாக இந்த நெல்மணிகளை கொட்டி அதன் உள்ளே ஒரு, 1 ரூபாய் நாணயத்தை போட்டு அப்படியே உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும். அந்த படியில் கோபுரம் போல நெல்மணிகளை வைக்கவேண்டும் நெல்மணி பொங்கி வழிய வேண்டும். சமையலறையில் அலமாரிக்கு மேல் பக்கத்தில் வைத்தாலும் சரி தான். எந்த பிரச்சனையும் கிடையாது. அது அப்படியே இருக்கட்டும்.

அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. அது அவ்வளவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பழைய நெல்மணிகளை எடுத்து காக்கை குருவிகளுக்கு உணவாக போட்டுவிட்டு மீண்டும் புதிய நெல்லை வாங்கி அந்த படியில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.

nel-kathir1

அரை படி, ஒருபடி நிரம்ப நெல்மணிகளை வைத்திருந்தால் அதை தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக காக்கை குருவிகளுக்கு இறையாக போடுங்கள். நெல்லை அனாவசியமாக வீட்டில் வீணாக்கக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி உங்களுடைய வீட்டில், இந்த நெல் நிறைவாக இருந்தால், நிச்சயமாக உங்கள் வீடும் சுபீட்சம் நிறைந்த வீடாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனைப் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.