- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுப்ரமணியர் திருக்கல்யாண வழிபாடு

சுப்ரமணியர் திருக்கல்யாண வழிபாடு

- Advertisement -

கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளான ஏழாம் நாள் முருகனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். சூரனை வதம் செய்ததால் மனம் மகிழ்ந்து இந்திரன் தன்னுடைய மகளான தேவயானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைப்பார். இந்த திருமண வைபவம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் நடைபெறும். அப்படிப்பட்ட நாளில் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சுப்ரமணியர் திருக்கல்யாண வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாக திகழ்வதும் நம்முடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக திகழ்வதும் நம்முடைய திருமணம்தான். அந்த திருமணம் சிறப்பாக நடைபெற்றால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் நம் வாழ்க்கையே வீணாகிவிடும். இது பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகும். அப்படிப்பட்ட திருமணம் நடைபெறுவதில் தடைகள் இருந்தாலோ அல்லது திருமணம் நடைபெற்ற பிறகு அந்த திருமணத்தில் பிரச்சினைகள் இருந்தாலோ முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் ஒரு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்றால் அதற்கு அடையாளமாக திகழ்வது குழந்தை பாக்கியமே. அந்த குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும் திருக்கல்யாண சமயத்தில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

திருமண தடை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் திருக்கல்யாணத்திற்கு தங்கத்தில் தாலி வாங்கி தரலாம். அந்த அளவிற்கு எங்களுக்கு வசதி இல்லை நாங்கள் வறுமையில் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் போன்ற திருமாங்கல்ய செட்டை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வாங்கி வந்து திருக்கல்யாணம் நடைபெறும் பொழுது அங்கு இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

இதோடு மட்டுமல்லாமல் திருமண வைபோகத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை இவர்களுக்கு திருமணம் நடக்கும் பொழுது மாலை மாற்றும் வழக்கம் என்பது இருக்கும். அப்படி மாலை மாற்றுவதற்கு மாலை வாங்கிக் கொடுத்தோம் என்றாலும் விரைவிலேயே நம்முடைய கழுத்தில் மாலை விழுகும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் கல்யாண சாப்பாடு அன்னதானமாக போடுவதன் மூலமும் தங்களுடைய வாழ்க்கையில் விரைவிலேயே கல்யாண விருந்து போடும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்காக பஞ்சாமிர்தம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கித் தர வேண்டும். பணமாக தராமல் பஞ்சாமிர்தத்திற்கு தேவையான பழ வகைகளை வாங்கித் தருவது நல்ல பலனை தரும். அதிலும் குறிப்பாக நம்மால் இயன்ற அளவு தேனை வாங்கித் தர வேண்டும். தேன் அபிஷேகம் செய்யும் பொழுது அதிலிருந்து சிறிதளவாவது வாங்கி வந்து அதை பிரசாதமாகவும், மருந்தாகவும் நினைத்து கணவனும் மனைவியும் உண்ண விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கேட்டது கிடைக்க கந்த சஷ்டி பரிகாரம்
இந்த எளிமையான வழிபாட்டு முறையை முருகப்பெருமானை மனதார நம்பி செய்பவர்களுக்கு தடைப்பட்டு இருக்கக்கூடிய சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்