வீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை  இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள்! வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்!

Amman

இன்றைக்கு அப்படி என்ன விசேஷமான தினம்! என்ற சிந்தனை எல்லோருக்குமே வந்திருக்கும். ஏனென்றால், அனைவராலும் அறியப்படாத ஒரு சிறப்பான நாள் தான் இன்றைய தினம். அதாவது, ஒருவருக்கு சந்தோஷமான வீடு, அமைதியான சூழ்நிலை, ஆரோக்கியமான வாழ்க்கை, தடையில்லாத முன்னேற்றம், இவைகள் அனைத்தும் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இந்த பூஜையை இன்று மாலை செய்வது மிகவும் சிறப்பானது. ‘நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றும், அப்படி என்ன விசேஷம் இன்று!’ என்பதைப் பற்றியும், இந்த பூஜையை முறைப்படி எப்படி செய்ய வேண்டும், எந்த மந்திரத்தை உச்சரித்து செய்ய வேண்டும், குறிப்பிட்ட எந்த நேரத்தில் பூஜை செய்தால் நல்லது, என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

oom

தேவலோகத்தில் இருக்கும் தேவலோக மங்கையர்கள், தங்களது வாழ்வு என்றுமே சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை நினைத்து பூஜை செய்த நாள் தான் இன்றையதினம். குறிப்பிட்டு சொல்லப்போனால் ரம்பை தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனை நினைத்து பூஜை செய்து வரத்தை வாங்கிய தினம் என்றும் கூறலாம். அதாவது ‘ரம்பா திருதியை’.

இந்த தினத்தில் இறைவனை மனதார வேண்டிக் கொண்டு, குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், அம்பாளை மனதார  நினைத்துக்கொண்டு, நெய்யினால் செய்யப்பட்ட நெய்வேதியத்தை, இறைவனுக்குப் படைத்து தீபமேற்றி முறைப்படி, இன்று மாலை 5.45 மணியிலிருந்து 8.30 மணிக்குள்  இந்த மந்திரத்தை சொல்லி பூஜை செய்யவேண்டும். உங்களது கணவரும் இந்த பூஜையில் கலந்துகொண்டு, இந்த மந்திரத்தை உச்சரித்தால் வீட்டில் இருமடங்கு சந்தோஷம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்களுக்கான மந்திரம் இதோ!

இந்த பூஜையில் பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் சாவித்ரி சரஸ்வதி பத்னீம் தேஹி
புத்ரம் தேஹி க்ரஹேம் நமோஸ்துதே!

- Advertisement -

இந்த பூஜையில் கணவர் சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் சாவித்ரி சரஸ்வதி பதீம் தேஹி
புத்ரம் தேஹி க்ரஹேம் நமோஸ்துதே!

உங்களது கணவரால் பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அம்பாளை மனதார வேண்டிக் கொண்டாலே போதும். பூஜையை உங்கள் வீட்டு முறைப்படி செய்யலாம். சாதாரண வெள்ளிக்கிழமை பூஜையை எப்படி  செய்வீர்களோ, அதன்படி செய்தாலே போதும். நெய்யினால் செய்யப்பட்ட நெய்வேதியம் மட்டும் ஒன்று அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

poojai

திருமணம் ஆகாதவர்களும் இந்த பூஜையை செய்யலாம் தவறொன்றுமில்லை. திருமணம் ஆகாதவர்களாக இருந்தால், நல்ல கணவர் வேண்டும். நல்ல மனைவி வேண்டும் என்பதனையும், திருமண மாணவர்களாக இருந்தால் சண்டை சச்சரவு இல்லாத இல்லறம் அமைய வேண்டும் என்றும், நம்முடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லமுறையில் அமைந்து, நம்முடைய வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதனையும் இறைவனிடம் வேண்டி கேட்கும் மந்திரம்தான் இது.

Goddess Saraswathi

அதுவும் குறிப்பாக இன்றைய தினம் மாலை 5.45 மணியிலிருந்து 8.30 மணிக்குள் இருக்கும் இந்த சுபமான நேரத்தில், இந்த மந்திரத்தை உச்சரித்து வீட்டில் பூஜை செய்வது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்பிக்கையுள்ளவர்கள் இந்த பூஜையியை நம்பிக்கையோடு செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு. வாமனன் சேஷாத்ரி (9840130156)