ஆங்கிலேயரால் சுடப்பட்ட அம்மன் சிலை. அன்று முதல் வளைந்தே இருக்கும் அம்மன் கழுத்து

sugali-matha
- Advertisement -

ஆன்மிக வழியில் வாழ்ந்து இறுதியில் இறைவனுடன் கலப்பதே மனிதனின் உண்மையான லட்சியம் என்று கூறியவர்கள் நமது நாட்டின் ரிஷிகளும், முனிவர்களும். அந்த ஆன்மிக வழியில் மக்கள் அனைவரும் பயணிப்பதற்காகத்தான் நம் நாட்டில் பல கோவில்களை ஏற்படுத்தினர். இன்றும் ஆன்மிகமே இந்தியர்கள் பெரும்பாலானவர்களின் வாழ்வின் ஆதாரமாக இருக்கிறது. அப்படி வாழும் மக்கள், தாங்கள் வழிபடும் தெய்வங்களின் அற்புதங்களை, தங்கள் வாழ்வில் பல வகையில் உணர்ந்துள்ளனர். அப்படி ஒரு கோவிலின் தெய்வம் செய்த அதிசயத்தைப் பற்றி இங்கு காண்போம்.

Amman

சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்ஹி மாவட்டத்தில் உள்ள ஆவா என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது “சுகலி மாதா ஆலயம்”. இந்த கோவிலின் பிரதான தெய்வமாக வீற்றிருக்கிறார் “சுகலி மாதா”. பழங்காலம் தொட்டே போர்வீரர்கள் அதிகம் வந்து வழிபடும் ஆலயமாக திகழ்ந்தது சுகலி மாதா கோவில். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலும், அப்போதைய ஆங்கிலேய அரசால் தேடப்பட்டு வந்த பல இந்திய விடுதலை போராளிகள், இங்கு ரகசியமாக வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதையெல்லாம் இங்கு வந்த போது கேள்விப்பட்ட ஒரு ஆங்கிலேய அரசு அதிகாரி, ஆத்திரத்தில் இக்கோவிலின் சுகலி மாதாவின் சிலையை தன் துப்பாக்கியால் சுட்டதாக இக்கோவிலின் வரலாற்றை அறிந்த சிலர் கூறுகின்றனர்.

- Advertisement -

அப்படி சுட்ட போது அந்த தோட்டா இந்த சுகலி மாதா விக்கிரகத்தின் கழுத்துப்பகுதியில் பாய்ந்து கழுத்து இடது புறம் சாய்ந்ததாகவும். அன்றிலிருந்து இந்த கல்லாலான சுகலி மாதா விக்கிரகத்தின் கழுத்துப் பகுதி எப்போதும் இடது பக்கம் சாய்ந்தவாறு இருப்பதாக கூறப்படுகிறது.

British

சில வருடங்களுக்கு முன்பு இக்கோவிலின் நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து சுகலி மாதாவின் விக்கிரகத்தை சீராக்க சிற்பிகளைக் கொண்டு, அச்சிலைக்கு பதிலாக, கழுத்து நேராக இருக்கும் வகையில் புதிதாக ஒரு சிலையை வடித்து இக்கோவிலில் ஸ்தாபித்தனர். ஆனால் சில நாட்களில் அந்த புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சிலையின் கழுத்தும் இடது பக்கம் சாய்ந்திருந்தது. அதே நேரத்தில் இந்த புதிய சிலையை செய்த அந்த சிற்பியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு துன்புற்றார்.

- Advertisement -

இதன் பிறகு சில காலம் கழித்து வேறொரு சிற்பியைக் கொண்டு புதிதாக கழுத்து நேராக கொண்ட சுகலி மாதாவின் சிலையை செய்து ஸ்தாபித்த போது, முன்பு போலவே சிலையின் கழுத்து இடப்புறமாக சாய்ந்துகொண்டது. இந்த சிற்பியும் உடல்நலம் பாதிக்கப்பட்டார். கழுத்து சாய்ந்த நிலையிலேயே இருப்பது தான் சுகலி மாதாவின் விருப்பமென்று எண்ணி, அதன் பிறகு இத்தகைய சிலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதை கைவிட்டனர் இக்கோவிலின் நிர்வாகிகள்.
அதிசயமான இந்த “சுகலி மாதா கோவில்” ராஜஸ்தான் மாநிலத்தின், பல்ஹி மாவட்டத்தில் ஆவா கிராமத்தில் அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
மிகப்பெரிய ஒரு அழிவை பற்றி முன்பே கூறிய ஞானியை பற்றி தெரியுமா ?

English Overview:
Here we have some details about Sugali matha temple in Tamil. This temple in Rajasthan for about 500 years. The power of sugali mata is explained above.

- Advertisement -