அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கி விட்டால் ஒரு மனிதனுக்கு சுக்கிர யோகம் அடித்து விட்டது என்று அர்த்தம். சுக்கிர யோகம் அடிக்கும் போது தான் ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். அதிர்ஷ்டமும் சுக்கிரனும் வேறு வேறு கிடையாது. இந்த அதிர்ஷ்டத்தை நம் வசப்படுத்த, சுக்கிரனை நம் வசப்படுத்திக் கொள்ள, இன்று ஒரு எளிமையான பரிகாரத்தை தான் பார்க்கப் போகின்றோம்.
பத்து ரூபாய் செலவு செய்தால் போதும். நீங்கள் 10 லட்ச ரூபாய்க்கு சொந்தக்காரராகலாம். உங்களுக்கும் சுக்கிர யோகம் அடிக்க இந்த பரிகாரத்தைப் பற்றிய விரிவான தகவலை தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கா. வாங்க பதிவிற்குள் செல்வோம்.
அதிர்ஷ்டம் பெற சுக்கிரன் வழிபாடு
சுக்கிரனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பொருள் கல்கண்டு. இதை சாதாரணமாக நினைக்கக் கூடாது. வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் மகாலட்சுமிக்கு கற்கண்டு நெய்வேதியம் செய்வது அத்தனை சிறப்பான பலனை கொடுக்கும். பத்து ரூபாய்க்கு கற்கண்டு வாங்கிக் கொள்ளுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள்.
அந்த இறைவனை வழிபாடு செய்து விடுங்கள். இந்த கல்கண்டு பிரசாதத்தை, அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இந்த கல்கண்டை இறைவனுக்கு வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. கோவிலுக்கு சென்று கல்கண்டு தானம் செய்ய வேண்டும். அவ்வளவு தான்.
அந்த கோவிலில் யாசகம் கேட்பவர்களுக்கு இந்த தானத்தை செய்தாலும் தவறு கிடையாது. கல்கண்டை தானம் செய்யும் போது சுக்கிர பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, ‘ஓம் ஷும் சுக்ராய நமஹ’ என்ற மந்திரத்தை மட்டும் மனதிற்குள் சொல்லுக் கொண்டே இருங்கள். தினமும் இந்த கல்கண்டு தானம் செய்ய முடியும் என்பவர்கள் செய்யலாம்.
முடியாது என்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் செய்தாலும் சிறப்பான பலனை கொடுக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்துவர, உங்கள் கைகளால் கல்கண்டை தானம் செய்து வர உங்கள் கர்மா படிப்படியாக குறைய தொடங்கிவிடும். சுக்கிர பகவான் உங்க ஜாதக கட்டத்தில் சரியே இல்லை, நீங்கள் கடன் சுமையில் சிக்கி இருந்தாலும் சரி, அந்த கடனிலிருந்து சீக்கிரம் வெளிவர இந்த எளிமையான பரிகாரம் போதும். வெறும் பத்து ரூபாய்க்கு கல்கண்டு வாங்கினாலே போதும் பலவிதமான கஷ்டங்கள் தீரும்.
இதையும் படிக்கலாமே: பிரச்சினைகள் தீர வாஸ்து பரிகாரம்
அதேபோல இன்னொரு எளிமையான பரிகாரமும் இருக்கிறது. தினமும் யாராவது ஒரு ஏழைக்கு வாழை இலை விரித்து அதில் சாதம் போட்டு, கொஞ்சமாக நெய் விட்டு அன்னதானத்தை பரிமாறினால் உங்கள் கடன் சுமை 48 நாட்களுக்குள் குறையும் என்பது நம்பிக்கை. வாழை இலையில் இல்லாதவர்களுக்கு சாப்பாடு போடுவதும் உங்கள் கர்மாவை கழிக்க கூடிய பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறுங்கள்.