அளவற்ற செல்வத்தை அள்ளித்தரும் சுக்கிர விரதம் பற்றி தெரியுமா ?

Sukran
- Advertisement -

மனித வாழ்வில் பல வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றோம். ஆனால் அனைவராலுமே இந்த புவியில் உள்ள அத்தனை சுகங்களையும் அனுபவித்து வாழ முடியாது. செல்வங்களுக்கு அதிபதியாக “திருமகளும், குபேரனும்” இருக்கின்றனர். இவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன் ஒரு மனிதனுக்கு செல்வத்தையும், சுகத்தையும் அவனது கர்ம வினைகளுக்கு ஏற்ற வாறு கொடுக்கிறார். இந்த சுக்கிரனின் முழுமையான அருளை பெற “சுக்கிர விரதம்” இருக்கும் முறைகளை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

sukran

இந்திய ஜோதிட சாத்திரத்தின் படி ஒன்பது கோள்களில் ஆறாவதாக வரும் கிரகம் சுகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் கிரகம் ஆகும். சுக்கிரன் கிரகம், ஒரு மனிதனின் இல்லற சுகம், பிறரை வசீகரிக்கும் அழகிய தோற்றம், ஆபரணங்களின் சேர்க்கை, ஆடம்பர வாகனம், கலைகளில் தேர்ச்சி மற்றும் ஈடுபாடு, செல்வந்த வாழ்வு போன்றவற்றிற்கு காரணமாகிறார். ஆங்கில மாத 6, 15, 24 ஆகிய தேதிகளிலும், ஜாதகத்தில் சுக்கிரனின் உச்ச வீடான “மீனம்” மற்றும் சுக்கிரனின் ஆட்சி வீடான “ரிஷபம், துலாம்” ஆகியவற்றில் சுக்கிரன் இருக்க பிறந்தவர்கள் சுக்கிரனின் நற்பலன்களை பெறுவார்கள். சுக்கிரன் கன்னி ராசியில் இருக்க பிறந்தவர்கள் சுக்கிரனின் தோஷத்தை அடைகின்றனர். அது போல் சிலருக்கு அவர்களது ஜாதகத்தில் சுக்கிர திசை ஏற்பட்டிருந்தாலும் கூட எப்படிப்பட்ட நற்பலன்களும் அவ்வளவாக ஏற்படாமல் இருக்கும். இப்படிப்பட்ட பாதிப்புகளை கொண்டிருப்பவர்கள் சுக்கிரனால் தங்களுக்கு நற்பலன்கள் கிடைக்க “சுக்கிர விரதம்” இருக்க வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் மகாலட்சுமி மற்றும் குபேரனின் படங்களுக்கு முன்பு நெய்விளக்கேற்றி, தூபங்கள் கொளுத்தி, கேசரி அல்லது வேறு ஏதேனும் ஒரு வகை இனிப்பு அல்லது வெறும் கல்கண்டு சர்க்கரை போன்றவற்றை நிவேதனம் வைத்து, அத்தெய்வங்களுக்குரிய மந்திரங்களை கூறி வழிபட வேண்டும்.

பின்பு காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக அருகிலுள்ள கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு மல்லிப்பூக்களை சாற்றி, இனிப்பை நிவேதித்து சுக்கிர பகவானுக்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டு முறையை 27 வெள்ளிக்கிழமைகள் கடைபிடித்து வரும் போது சுக்கிர தோஷம் கொண்டவர்களுக்கு அத்தோஷங்கள் நீங்கும். சுக்கிர திசை காலத்தில் நன்மைகள் ஏற்படாதவர்களுக்கும் நற்பலன்கள் ஏற்பட தொடங்கும். இந்த சுக்கிர விரத முறையை உங்கள் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க முடியுமானால் சிறந்த நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

Sukran mantra in tamil

பொதுவாக சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் நீச்சம் பெற்றவர்களுக்கு சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றவர்களும் மேற்கூறிய சுக்கிர விரதத்தை தங்கள் வாழ்வில் கடைபிடித்து வந்தால், அவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படாமல் காத்து அருள் புரிவார் சுக்கிர பகவான்.

இதையும் படிக்கலாமே:
எத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we described Sukran Vratham and Sukran Valipdu palangal in Tamil.

- Advertisement -